முதல் டி20: பேர்ஸ்டோவ் அதிரடியால் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இங்கிலாந்து

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
முதல் டி20: பேர்ஸ்டோவ் அதிரடியால் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இங்கிலாந்து

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

கேப்டவுனில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. டு பிளெசிஸ் 40 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். சாம் கரண் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

பிறகு விளையாடிய இங்கிலாந்து அணி முதல் 6 ஓவர்களுக்குள் 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. பிறகு ஜோடி சேர்ந்த பேர்ஸ்டோவும் பென் ஸ்டோக்ஸும் சிறப்பாக விளையாடினார்கள். 27 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார் ஸ்டோக்ஸ். 48 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியின் வெற்றிக்கு உதவினார் பேட்ஸ்டோவ். இங்கிலாந்து அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பேர்ஸ்டோவ் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. நவம்பர் 27 முதல் டி20 தொடர் நடைபெறுகிறது. அதன்பிறகு டிசம்பர் 4 முதல் தொடங்கும் ஒருநாள் தொடர் டிசம்பர் 9-ல் நிறைவுபெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com