டி20 தரவரிசை: நெ.1 இடத்தில் புதிய பேட்ஸ்மேன்!

பேட்ஸ்மேன்களுக்கான டி20 தரவரிசையில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் முதல் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
டி20 தரவரிசை: நெ.1 இடத்தில் புதிய பேட்ஸ்மேன்!

பேட்ஸ்மேன்களுக்கான டி20 தரவரிசையில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் முதல் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடுகின்றன. டி20 தொடர் செளதாம்ப்டனில் நடைபெற்றுள்ளன. ஒருநாள் தொடர் மான்செஸ்டரில் நடைபெறவுள்ளன. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தை 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து. 2-வது டி20 ஆட்டத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றியது. 3-வது டி20 ஆட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. பிறகு விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 19.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. எனினும் டி20 தொடரை 2-1 என இங்கிலாந்து வென்றுள்ளது.

இந்த டி20 தொடரில் 66, 42, 21 ரன்கள் என இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் சிறப்பாக விளையாடினார். இதுவரை விளையாடிய 16 டி20 ஆட்டங்களில் 682 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி - 48.71, ஸ்டிரைக் ரேட் - 146.66. இதையடுத்து 877 புள்ளிகளுடன் பேட்ஸ்மேன்களுக்கான டி20 தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இதற்கு முன்பு முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 869 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் உள்ளார். ஃபிஞ்ச் 3-ம் இடத்திலும் இந்தியாவின் ராகுல் 4-ம் இடத்திலும் உள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com