தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

யு.எஸ். ஓபன் இறுதிச்சுற்றில் மோதும் டொமினிக் தீம் - அலெக்சாண்டர் வெர்வ்

இந்த வருட யு.எஸ். ஓபன் இறுதிச்சுற்றில் டொமினிக் தீம் - அலெக்சாண்டர் வெர்வ் ஆகிய இருவரும் மோதவுள்ளார்கள். 

News image

டொமினிக் தீம்

Updated On :12 செப்டம்பர் 2020, 5:51 am


இந்த வருட யு.எஸ். ஓபன் இறுதிச்சுற்றில் டொமினிக் தீம் - அலெக்சாண்டர் வெர்வ் ஆகிய இருவரும் மோதவுள்ளார்கள். 

3-ம் நிலை வீரர் மெட்வெடேவை 6-2, 7-6(7), 7-6(5) என நேர் செட்களில் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார் டொமினிக் தீம். இந்த ஆட்டம் 3 மணி நேரம் நடைபெற்றது.

அலெக்சாண்டர் வெர்வ் முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பப்லோவை 3-6, 2-6, 6-3, 6-4, 6-3 என வீழ்த்தியுள்ளார். முதல் இரு செட்களை இழந்த பிறகும் அடுத்த மூன்று செட்களிலும் நம்பிக்கையுடன் விளையாடி அரையிறுதி ஆட்டத்தில் வென்றுள்ளார்.

பல வீரர்கள் நம்பிக்கையை கைவிட்டிருப்பார்கள். ஆனால் நான் தொடர்ந்து போராடினேன். எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் சென்றேன். கடைசியில் இந்த ஆட்டத்தில் நான் தான் வெற்றி பெற்றுள்ளேன். இது மிகவும் வித்தியாசமான அனுபவம் என்று கூறியுள்ளார் அலெக்சாண்டர் வெர்வ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.