இலங்கை பிரீமியர் லீக் டி20 போட்டியில் பங்கேற்க கிறிஸ் கெயில் விருப்பம்!

இலங்கை பிரீமியர் லீக் டி20 போட்டியில் கெயில், டேரன் சமி, டேரன் பிராவோ உள்ளிட்ட பல சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கவுள்ளார்கள். 
இலங்கை பிரீமியர் லீக் டி20 போட்டியில் பங்கேற்க கிறிஸ் கெயில் விருப்பம்!
Published on
Updated on
1 min read

இலங்கை பிரீமியர் லீக் டி20 போட்டியில் கெயில், டேரன் சமி, டேரன் பிராவோ உள்ளிட்ட பல சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கவுள்ளார்கள். 

ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 20 வரை இலங்கை பிரீமியர் லீக் டி20 போட்டி நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் முதலில் அறிவித்தது. பிறகு கரோனா தொடர்பான நிர்வாகக் காரணங்களால் போட்டியைக் கடந்த மாதம் ஒத்திவைத்தது.

இந்நிலையில் நவம்பர் 14 முதல் டிசம்பர் 6 வரை எல்பிஎல் (Lanka Premier League) எனப்படும் இலங்கை பிரீமியர் லீக் டி20 போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான வீரர்களைத் தேர்வு செய்யும் எல்பிஎல் ஏலம் நிகழ்வு அக்டோபர் 1 அன்று நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் பங்கேற்க கிறிஸ் கெயில், டேரன் சமி, டேரன் பிராவோ, சாஹித் அப்ரிடி, ஷகில் அப் ஹசன், ரவி பொபாரா, காலின் மன்ரோ, பிளாண்டர், முனவ் படேல் ஆகிய சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய வீரர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். 

கொழும்பு, கண்டி, கேலே, டம்புல்லா, யாழ்ப்பாணம் என ஐந்து அணிகள் இப்போட்டியில் பங்குபெற உள்ளன. 23 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 

ஒவ்வொரு அணியும் ஆறு வெளிநாட்டு வீரர்களைத் தேர்வு செய்துகொள்ளலாம். ஆட்டத்தின்போது நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே ஓர் அணியில் அனுமதிக்கப்படுவார்கள். 30 சர்வதேச மற்றும் 65 உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கவுள்ளார்கள். 

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு வீரர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என இலங்கை அரசு கட்டளையிட்டதால் வேறுவழியில்லாமல் இலங்கை பிரீமியர் லீக் டி20 போட்டி கடந்த மாதம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்தமுறை வெளிநாட்டு வீரர்கள் ஏழு நாள்களுக்கு மட்டும் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்குமாறு இலங்கை அரசிடம் இலங்கை கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com