பிரெஞ்சு ஓபன்: பெனாய்ட் பேர் பங்கேற்பது சந்தேகம்

பிரான்ஸ் வீரர் பெனாய்ட் பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இரு முறை உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் பிரெஞ்சு ஓபனில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பிரெஞ்சு ஓபன்: பெனாய்ட் பேர் பங்கேற்பது சந்தேகம்


ஹம்பர்க்3: பிரான்ஸ் வீரர் பெனாய்ட் பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இரு முறை உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் பிரெஞ்சு ஓபனில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான பெனாய்ட் பேர், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதால், அமெரிக்க ஓபனில் இருந்து விலகினார். இந்த நிலையில் ஜெர்மனியில் நடைபெற்ற ஹம்பர்க் ஓபனில் பங்கேற்க சென்ற பெனாய்ட் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனினும் போட்டிக்கு முந்தைய தினம் அவருக்கு கரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்ததால், போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார். முதல் சுற்றில் நார்வேயின் காஸ்பர் ரூட்டை எதிர்கொண்ட பெனாய்ட் பேர் 4-6, 0-2 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தபோது, போட்டியிலிருந்து விலகினார். 
இந்த ஆட்டத்துக்குப் பிறகு அவர் பேசுகையில், "நான் மிகவும் சோர்வாக இருந்ததால் ஆட்டத்திலிருந்து விலக நேர்ந்தது' என்றார். இரு முறை கரோனாவால் பாதிக்கப்பட்ட பெனாய்ட் பேர், மிகவும் சோர்வடைந்துள்ளதால், பிரெஞ்சு ஓபனில் பங்கேற்பதில் சந்தேகம் நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com