டக்வொர்த் லூயிஸ் முறையைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவரான டோனி லூயிஸ் காலமானார்

டக்வொர்த் லூயிஸ் மழை விதிமுறையைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவரான இங்கிலாந்தைச் சேர்ந்த டோனி லூயிஸ் இன்று காலமானார். அவருக்கு வயது, 78.
டக்வொர்த் - லூயிஸ் (வலது)
டக்வொர்த் - லூயிஸ் (வலது)

டக்வொர்த் லூயிஸ் மழை விதிமுறையைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவரான இங்கிலாந்தைச் சேர்ந்த டோனி லூயிஸ் இன்று காலமானார். அவருக்கு வயது, 78.

1999-ல் பிராங்க் டக்வொர்த் - டோனி லூயிஸ் ஆகிய இருவரும் கண்டுபிடித்த மழை விதிமுறையை டிஎல் என்கிற பெயரில் சர்வதேச கிரிக்கெட்டில் அமல்படுத்தியது ஐசிசி. கிரிக்கெட் ஆட்டங்களில் மழையால் ஆட்டம் தடைபடும்போது மீதமுள்ள ஓவர்களைக் கொண்டு ஆட்டத்தை முடிக்க டக்வொர்த் லூயிஸ் விதிமுறை உதவியது.

1992 உலகக் கோப்பைப் போட்டியில் விநோதமான மழை விதிமுறையால் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி போட்டியை விட்டு வெளியேறியது. இதன்பிறகு மேம்படுத்தப்பட்ட மழை விதிமுறைக்கான தேவையைக் கருத்தில் கொண்டு பிராங்க் டக்வொர்த் - டோனி லூயிஸ் ஆகிய இருவரும் கொண்டு வந்த கணக்கை ஐசிசி ஏற்றுக்கொண்டு 1999 முதல் சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களில் பயன்படுத்தி வருகிறது. 2014-ல் ஆஸ்திரேலிய பேராசிரியர் ஸ்டீவ் ஸ்டேர்ன், டக்வொர்த் லூயிஸ் விதிமுறையில் சிறிய மாற்றம் கொண்டு வந்தார். இதையடுத்து புதிய மழை விதிமுறை டிஎல்எஸ் என  மாற்றி அழைக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com