தோனியை ஓய்வு பெற வைத்துவிட்டால் மீண்டும் கிடைக்க மாட்டார்: நாசர் ஹுசைன் எச்சரிக்கை!

கடந்த 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் தோல்விக்குப் பின் தோனி எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை.
தோனியை ஓய்வு பெற வைத்துவிட்டால் மீண்டும் கிடைக்க மாட்டார்: நாசர் ஹுசைன் எச்சரிக்கை!

கடந்த 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் தோல்விக்குப் பின் தோனி எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை.

கரோனா பாதிப்பால், 2020 ஐபிஎல் போட்டி, ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது. 2020 ஐபிஎல் போட்டி, கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருடம் நடக்காமல் போனால் தோனியின் நிலைமை என்ன ஆகும் என்பதற்குப் பலரும் பலவிதமான கணிப்புகளை அளித்து வருகிறார்கள்.

மூத்த வீரரான தோனி கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் இருந்து எந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. டெஸ்ட்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்ட அவா், ஒருநாள், டி20 ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெற்றுவிடுவாரா என ரசிகர்கள் கவலையில் உள்ளார்கள். வரும் ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக ஆடினால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது என பயிற்சியாளா் சாஸ்திரி கூறியுள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன், தோனி பற்றி கூறியதாவது:

இந்திய அணிக்கு தோனியைத் தேர்வு செய்ய முடியுமா? இந்தக் கேள்வி மட்டும்தான் கேட்கப்படவேண்டும். ஓர் அணிக்குத் தேர்வாக வேண்டிய அனைவருக்கும் இக்கேள்வி பொருந்தும். நான் பார்த்தவரை, தோனியால் இந்திய அணிக்குப் பெரிதளவில் பங்களிக்க முடியும். இலக்கை விரட்டும்போது ஓரிரு முறை அவர் தோல்வியடைந்திருக்கலாம். ஆனால் தோனியிடம் இன்னமும் திறமை உள்ளது.

உங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள். ஒருமுறை தோனி ஓய்வுபெற்று வெளியேறிவிட்டால், மீண்டும் அவர் உங்களுக்குக் கிடைக்க மாட்டார். மகத்தான வீரர்கள் அரிதாகவே கிடைப்பார்கள். எனவே அவரை முன்பே ஓய்வு பெற வைத்து விடவேண்டாம். என்ன நினைக்கிறார் என்பது தோனிக்கு மட்டும்தான் தெரியும். கடைசியில் தேர்வுக்குழுவினர் தான் தேர்வு செய்யப்போகிறார்கள் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com