ஐபிஎல்-லில் முதல்முறை: ராஜஸ்தான் ராயல்ஸ் ஃபீல்டிங் பயிற்சியாளருக்கு கரோனா!

ஐபிஎல் 2020 அட்டவணை கூட இன்னும் வெளியிடப்படவில்லை. அதற்குள் முதல் கரோனா பாதிப்பு...
ஐபிஎல்-லில் முதல்முறை: ராஜஸ்தான் ராயல்ஸ் ஃபீல்டிங் பயிற்சியாளருக்கு கரோனா!

ஐபிஎல் 2020 அட்டவணை கூட இன்னும் வெளியிடப்படவில்லை. அதற்குள் முதல் கரோனா பாதிப்பு நிகழ்ந்துள்ளது.

இந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 19 (சனிக்கிழமை) அன்று தொடங்கும் ஐபிஎல் போட்டி நவம்பர் 10 (செவ்வாய்) அன்று முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜாவில் 53 நாள்களுக்கு 60 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 

ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த மத்திய அரசு சமீபத்தில் அனுமதி தந்தது. இதையடுத்து ஐபிஎல் போட்டியை நடத்த ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியத்துக்கு பிசிசிஐ அனுமதி தந்துள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் திஷாந்த் யாக்னிக், கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை ராஜஸ்தான் ராயல் அணி தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்த வருட ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக கரோனா பாதிப்பு நிகழ்ந்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்களும் பயிற்சியாளர்களும் அடுத்த வாரம் மும்பையில் ஒன்றுகூடி, அங்கிருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்லவுள்ளார்கள். இதற்காக அனைவரும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். உதய்பூரில் உள்ள ஃபீல்டிங் பயிற்சியாளர் திஷாந்த்துக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். 14 நாள்கள் கழித்து அவருக்கு இரு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இரண்டிலும் தொற்று இல்லை என்பது உறுதியானால் தான் அவரால் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்ல முடியும். அங்கு 6 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு மூன்று கரோனா பரிசோதனைகளில் கரோனா இல்லை என்பது உறுதியாக வேண்டும். பிறகுதான் திஷாந்தால் பயிற்சியில் கலந்துகொள்ள முடியும். 

மற்ற அனைவருக்கும் கரோனா இல்லை என்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. திஷாந்துடன் எந்த ஒரு ராஜஸ்தான் அணி வீரரும் அல்லது ஐபிஎல் வீரரும் பயிற்சி மேற்கொள்ளவில்லை. கரோனாவிலிருந்து விரைவில் குணமாகி ஐக்கிய அரபு அமீரகத்தில் எங்களுடன் திஷாந்த் இணைவார் எனக் காத்திருக்கிறோம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com