ஸ்மித் விக்கெட்டை வீழ்த்திய ஷர்துல் தாக்குருக்கு இந்திய டி20 அணியில் இடமில்லை!

இந்திய டி20 அணியில் இடம்பெறாத காரணத்தால் நாடு திரும்புகிறார்...
ஸ்மித் விக்கெட்டை வீழ்த்திய ஷர்துல் தாக்குருக்கு இந்திய டி20 அணியில் இடமில்லை!

கான்பெராவில் மிக நன்றாகப் பந்துவீசிய ஷர்துல் தாக்குர், இந்திய டி20 அணியில் இடம் பிடிக்காததால் நாடு திரும்புகிறார்.

நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 49.3 ஓவர்களில் 289 ரன்களுக்கு சுருண்டது. இந்திய வீரர் பாண்டியா ஆட்டநாயகன் ஆனார். 

வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்குர், 51 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்மித் விக்கெட்டையும் அவர் தான் வீழ்த்தினார். 

இந்நிலையில் மூன்று ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் நாளை முதல் தொடங்குகிறது. 

இந்திய டி20 அணியில் பும்ரா, தீபக் சஹார், ஷமி, நடராஜன், சைனி ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள். 

இந்நிலையில் கிடைத்த ஒரு வாய்ப்பிலும் நன்றாகப் பந்துவீசிய ஷர்துல் தாக்குர், இந்திய டி20 அணியில் இடம்பெறாத காரணத்தால் நாடு திரும்புகிறார்.

இந்தியா கடைசியாக விளையாடிய டி20 தொடரில் (நியூசிலாந்தில் விளையாடிய தொடர்) 5 ஆட்டங்களில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஷர்துல். 4-வது டி20 ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதும் பெற்றார். இரு அணிகளிலும் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரரும் அவர் தான். நேற்று நடைபெற்ற ஒருநாள் ஆட்டத்திலும் சிறந்த இந்திய பந்துவீச்சாளர் ஷர்துல் தான்.  

இந்தளவுக்கு இந்திய அணிக்குச் சிறப்பாகப் பங்களித்திருக்கும் ஷர்துல் தாக்குர், இந்திய டி20 அணியில் இல்லாதது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இந்திய டெஸ்ட் அணியில் பும்ரா, ஷமி ஆகியோர் நிச்சயம் இடம்பெறுவார்கள் என்பதால் டி20 ஆட்டங்களில் அவர்கள் விளையாடுவார்களா என்பது சந்தேகம் தான். இதனால் நடராஜனை டி20, ஒருநாள் அணிகளில் சேர்த்தது போல ஷர்துல் தாக்குரையும் டி20 அணியில் சேர்க்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளார்கள். 

ஷர்துல் தாக்குர் 1 டெஸ்ட், 12 ஒருநாள், 15 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com