இளம் வீரருக்கு முதல் டெஸ்டில் வாய்ப்பு: பயிற்சியாளர் உறுதி

ஆல்ரவுண்டர் கேம்ரூன் கிரீனுக்கு முதல் டெஸ்டில் வாய்ப்பு அளிக்கப்படும் என ஆஸ்திரேலிய அணிப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்.
இளம் வீரருக்கு முதல் டெஸ்டில் வாய்ப்பு: பயிற்சியாளர் உறுதி


ஆல்ரவுண்டர் கேம்ரூன் கிரீனுக்கு முதல் டெஸ்டில் வாய்ப்பு அளிக்கப்படும் என ஆஸ்திரேலிய அணிப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது.

டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.

காயம் காரணமாக டேவிட் வார்னர் முதல் டெஸ்டிலிருந்து விலகினார். பிறகு மற்றொரு தொடக்க வீரருமான வில் புகோவ்ஸ்கியும் விலகினார். இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 2-வது பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் அபாட்டுக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டிலிருந்து அவர் விலகினார். தற்போது, ஆஸ்திரேலிய அணியில் ஹென்றிகஸ் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்தியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 21 வயது ஆல்ரவுண்டர் கேம்ரூன் கிரீனுக்குக் காயம் ஏற்பட்டது. பேட்ஸ்மேன் அடித்த ஷாட்டினால் பந்து அவருடைய தலையில் பட்டது. இதனால் உடனடியாகப் பயிற்சி ஆட்டத்திலிருந்து விலகி சிகிச்சை எடுத்துக்கொண்டார். இந்நிலையில் அவர் உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தால் முதல் டெஸ்டில் வாய்ப்பு அளிக்கப்படும் என ஆஸ்திரேலிய அணிப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார். மேலும் தெரிவித்ததாவது:

உடற்தகுதியை அடைந்தால் கேம்ரூன் கிரீன் முதல் டெஸ்டில் நிச்சயம் விளையாடுவார். ஒரு வீரருக்குத் தலையில் அடிபட்டால் அவர் மீண்டு வருவதற்கான சில நடைமுறைகள் உள்ளன. கிரீனுக்கு ஏற்பட்ட சம்பவம் அசாதாரணமானது. உடற்தகுதியை அடைந்து அவர் நல்லபடியாகப் பயிற்சிகளை மேற்கொண்டால் முதல் டெஸ்டில் நிச்சயம் விளையாடுவார். அவருடைய அறிமுகம் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும். ஒரு பேட்ஸ்மேனாக அணியில் நிச்சயம் இடம்பெறக் கூடியவர். அவர் கூடுதலாகச் சில ஓவர்கள் வீசினால் நல்லது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com