டெஸ்ட் தரவரிசை: 2-ம் இடத்துக்கு முன்னேறிய விராட் கோலி
By DIN | Published On : 15th December 2020 05:31 PM | Last Updated : 15th December 2020 05:31 PM | அ+அ அ- |

பேட்ஸ்மேன்களுக்கான ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
புதிய ஐசிசி டெஸ்ட் தரவரிசை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், இந்திய கேப்டன் விராட் கோலி, 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தில் உள்ள இப்பட்டியலில் ரஹானே, முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார். புஜாரா, 7-ம் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
பந்துவீச்சாளர்களுக்கான டெஸ்ட் தரவரிசையில் பேட் கம்மின்ஸ், முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் பும்ரா 8-ம் இடத்திலும் அஸ்வின் 10-ம் இடத்திலும் உள்ளார்கள்.
ஆல்ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜாவுக்கு 3-ம் இடமும் அஸ்வினுக்கு 6-ம் இடமும் கிடைத்துள்ளன.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இந்த வாரம் டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றன. இதையடுத்து வெளியிடப்படும் டெஸ்ட் தரவரிசையில் பல மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.