ரஹானே கேப்டன்ஸி: கோலி, சச்சின் கருத்து

இரு பயிற்சி ஆட்டங்களில் அஜிங்க்ய ரஹானே கேப்டனாக சிறப்பாகச் செயல்பட்டார்.
ரஹானே கேப்டன்ஸி: கோலி, சச்சின் கருத்து


இரு பயிற்சி ஆட்டங்களில் அஜிங்க்ய ரஹானே கேப்டனாக சிறப்பாகச் செயல்பட்டார். அந்த ஆட்டங்களில் அணியின் பலத்தை அறிந்திருந்ததுடன், அணிக்கு என்ன தேவையோ அதைச் செய்து தேர்ந்த நிலையில் அணியை வழிநடத்தியிருந்தார். 

2}ஆவது டெஸ்டிலிருந்து இந்திய அணியை நான் எந்த நிலையில் விட்டுச் சென்றேனோ, அவர் அப்படியே அதைத் தொடருவார் என்பதில் சந்தேகம் இல்லை. ஏற்கெனவே நாங்கள் இருவரும் இணைந்து பல ஆண்டுகள் விளையாடியுள்ளதால் எங்களிடையேயான புரிதல் சரியானதாக உள்ளது. ஏற்கெனவே கூறியதுபோல் தனிநபராகவும், கேப்டனாகவும் வலுவான நிலைக்கு மேம்பட ரஹானேவுக்கு இது சரியான தருணம். 

-விராட் கோலி, இந்திய கேப்டன்


அஜிங்க்ய ரஹானே மதி நுட்பம் உள்ள, சமநிலையுடன் இருக்கும் கிரிக்கெட் வீரர் ஆவார். எந்தவொரு பெரிய தொடருக்காகவும் ரஹானே தீவிரமாகத் தயாராவதே அவரிடம் எனக்கு பிடித்த விஷயம். அவரிடமும் ஆக்ரோஷம் இருக்கும் என்றாலும் அதை கட்டுப்படுத்திய வகையில் தேவைக்கேற்ப பயன்படுத்துவார். அவர் கடின உழைப்பாளி என்பது அவருடன் பழகிய நாள்களில் அறிந்துகொண்டேன். 

இந்திய அணியைப் பொருத்தவரை போட்டி முடிவுகளில் கவனம் செலுத்தாமல், அதில் செய்ய வேண்டியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். அப்போது போட்டி முடிவுகள் இயல்பாகவே சாதகமாக அமையும்.


-சச்சின் டெண்டுல்கர், இந்திய முன்னாள் வீரர் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com