2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் இருக்காது என பயிற்சியாளர் அறிவிப்பு

அணியில் மாற்றம் கொண்டு வர நான் மிகவும் துணிச்சல் கொண்டவனாக இருக்க வேண்டும்... 
2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் இருக்காது என பயிற்சியாளர் அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் இருக்காது என பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 53 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 2-ஆவது இன்னிங்ஸில் 36 ரன்களில் சுருண்டதால், ஆஸ்திரேலியாவின் வெற்றி எளிதானது.

2-வது டெஸ்ட் சனிக்கிழமை தொடங்குகிறது. இதுபற்றி ஆஸி. பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியதாவது:

முதல் டெஸ்டில் நாங்கள் வெற்றி பெற்ற விதத்தைப் பார்த்த பிறகு 2-வது டெஸ்டில் அணியில் மாற்றம் கொண்டு வர நான் மிகவும் துணிச்சல் கொண்டவனாக இருக்க வேண்டும். எதிர்பாராத விதமாக ஏதாவது ஏற்பட்டால் தவிர அணியில் எந்த மாற்றமும் இருக்காது. 

ஒருவரும் இல்லாததற்கு மெல்போர்ன் மைதானத்தில் 30,000 ரசிகர்கள் இருப்பது எவ்வளவோ மேல். சில வாரங்களுக்கு முன்பு மெல்போர்னில் பாக்ஸிங் டே டெஸ்ட் நடைபெறுமா என்கிற சந்தேகத்தில் இருந்தோம். ஒவ்வொரு முறை இங்கு விளையாட வரும்போதும் எனக்குச் சிலிர்ப்பு ஏற்படும். அபாரமான மைதானம். இங்கு விளையாடுவதற்கு வீரர்கள் மிகவும் விரும்புவார்கள் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com