மெல்போர்னில் இந்திய, ஆஸ்திரேலிய அணியினர் பயிற்சி

மெல்போர்னில் இந்திய, ஆஸ்திரேலிய அணியினர் பயிற்சி

பாக்ஸிங் டே டெஸ்ட் எதிர்வரும் நிலையில் இந்திய, ஆஸ்திரேலிய அணியினர் மெல்போர்ன் மைதானத்தில் தங்களது பயிற்சியை புதன்கிழமை தொடங்கினர். 

மெல்போர்ன்: பாக்ஸிங் டே டெஸ்ட் எதிர்வரும் நிலையில் இந்திய, ஆஸ்திரேலிய அணியினர் மெல்போர்ன் மைதானத்தில் தங்களது பயிற்சியை புதன்கிழமை தொடங்கினர். 
இந்திய அணியில் குறிப்பாக பிளேயிங் லெவனில் சேர்க்கப்படும் வாய்ப்புள்ள ஷுப்மன் கில், மயங்க் அகர்வாலுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இந்த இருவர் கூட்டணியே இந்திய இன்னிங்ûஸ தொடங்க வாய்ப்பிருக்கலாம் எனத் தெரிகிறது. 
அதேபோல், 2-ஆவது டெஸ்ட்டுக்கு அதிகம் பரிந்துரைக்கப்பட்ட லோகேஷ் ராகுலும் வலைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். தலையில் காயம் காரணமாக முதல் டெஸ்டில் விளையாடாத ஜடேஜாவும் வலைப்பயிற்சியில் பங்கேற்றிருந்தார். 
சுமார் ஒரு மணி நேரம் வரை சக வீரர் சேதேஷ்வர் புஜாராவுக்கு பெளலிங் செய்த அவர், சிறிது ஓய்வுக்குப் பிறகு மீண்டும் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டார். இதனால் அவர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படும் வாய்ப்பு அதிகம் இருக்கலாம் எனத் தெரிகிறது. 
அதேபோல் ஷமி இல்லாத நிலையில், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்குர் ஆகியோரின் வேகப்பந்துவீச்சு பயிற்சியில் கேப்டன் ரஹானே பேட்டிங் பயிற்சி மேற்கொண்டார். 
பயிற்சியை தொடங்கும் முன் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, அணி வீரர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கினார். ரித்திமான் சாஹாவுக்குப் பதில் அணியில் இணையலாம் என எதிர்பார்க்கப்படும் ரிஷப் பண்ட்டுடன் அவர் சில வார்த்தைகளை பகிர்ந்துகொண்டார். 
ஆஸி. அணியினர்: அதேபோல், ஆஸ்திரேலிய அணியினரும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். ஸ்மித் பேட்டிங்கில் பயிற்சி பெற, கேமரூன் கிரீன் தனது வேகப்பந்துகளால் பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் பயிற்சியில் இருந்தார். இது தவிர நாதன் லயன், மேத்யூ வேட், மிட்செல் ஸ்டார்க் உள்ளிட்டோரும் பயிற்சி மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com