டெஸ்ட் & டி20 அணிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார் டு பிளெஸ்ஸிஸ்!
By எழில் | Published On : 17th February 2020 05:12 PM | Last Updated : 17th February 2020 05:12 PM | அ+அ அ- |

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் அணிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ்.
எனினும் அனைத்து வகையான கிரிக்கெட் ஆட்டங்களில் தொடர்ந்து விளையாடப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.
இந்த முடிவை எடுப்பது கடினமாக இருந்தது. அதேசமயம் புதிய கேப்டன் குயிண்டன் டி காக்குக்கு முழு ஆதரவை வழங்குகிறேன். டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகையான கிரிக்கெட் ஆட்டங்களிலும் தொடர்ந்து விளையாடவுள்ளேன். அணியின் வெற்றிகளுக்குப் பங்களிக்கவுள்ளேன் என்று ஓர் அறிக்கையில் கூறியுள்ளார் டு பிளெஸ்ஸிஸ்.
தென் ஆப்பிரிக்க அணிக்காக 36 டெஸ்டுகளில் தலைமையேற்ற டு பிளெஸ்ஸிஸ், 18-ல் வெற்றி பெற்றும் 15-ல் தோல்வியும் அடைந்துள்ளார். டு பிளெஸ்ஸிஸ் தலைமையில் விளையாடிய 39 ஒருநாள் ஆட்டங்களில் 28-லும் 37 டி20 ஆட்டங்களில் 23-லும் வெற்றி அடைந்துள்ளது தென் ஆப்பிரிக்க அணி.
டு பிளெஸ்ஸிஸுக்கு அடுத்ததாக குயிண்டன் டிக் காக், தென் ஆப்பிரிக்க டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகளின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.