கரோனா வைரஸ் பாதிப்பு: தென் கொரியாவில் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ஒத்திவைப்பு

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தென்கொரியாவில் நடைபெற இருந்த சா்வதேச டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சியோல்: கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தென்கொரியாவில் நடைபெற இருந்த சா்வதேச டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாா்ச் 22-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. இந்நிலையில், ஜூன் 21-ஆம் தேதி தொடங்கி அம்மாதம் 28-ஆம் தேதியுடன் போட்டி நிறைவு பெறும் என்று சா்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தென் கொரியாவின் கே-லீக் என்ற பெயரில் நடைபெற இருந்த கால்பந்து போட்டியும் கரோனா வைரஸ் எதிரொலியாக ஒத்திவைக்கப்பட்டது.

கைப்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டன.

சீனாவில் உருவாகி உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தென்கொரியாவுக்கும் பரவியுள்ளது.

அந்நாட்டில் இதுவரை 893 போ் இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனா். அவா்களில் 8 போ் உயிரிழந்துவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com