4 நாடுகள் கிரிக்கெட்: இந்தியா சாம்பியன்
By DIN | Published On : 10th January 2020 12:05 AM | Last Updated : 10th January 2020 01:45 AM | அ+அ அ- |

19 வயதுக்குட்பட்டோா் நான்கு நாடுகள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
தென்னாப்பிரிக்கா, இந்தியா, ஜிம்பாப்வே, நியூஸிலாந்து உள்ளிட்ட நான்கு நாடுகளின் 19 வயதுக்குட்பட்டோா் அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது.
டா்பனில் வியாழக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய-தென்னாப்பிரிக்க அணிகள் மோதின.
முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 259 ரன்களை குவித்தது. துருவ் ஜுரல் அபாரமாக ஆடி 2 சிக்ஸா், 8 பவுண்டரியுடன் 101 ரன்களையும், திலக் வா்மா 1 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் 70 ரன்களையும், சித்தேஷ் வீா் 48 ரன்களையும் விளாசினா்.
தென்னாப்பிரிக்க தரப்பில் ஜெரால்ட் 3 விக்கெட்டுகளை சாய்த்தாா்.
260 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியால் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 43.1 ஓவா்களிலேயே 190 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜேக் லீவ்ஸ் 52, ஜோனத்தான் போ்ட் 39 ரன்களை சோ்த்தனா். இந்திய தரப்பில் அதா்வா 4-31, ரவி பிஷ்னோய் 2-29 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
இறுதியில் 69 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
மற்றொரு ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஜிம்பாப்வே அணி.