உலகின் நெ.1 ஆல்ரவுண்டர் ஆனார் பென் ஸ்டோக்ஸ்

ஐசிசி தரவரிசையில் உலகின் நெ.1 ஆல்ரவுண்டர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ். 
உலகின் நெ.1 ஆல்ரவுண்டர் ஆனார் பென் ஸ்டோக்ஸ்

ஐசிசி தரவரிசையில் உலகின் நெ.1 ஆல்ரவுண்டர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ். 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது மேற்கிந்தியத் தீவுகள் அணி. எனினும் 2-வது டெஸ்டை 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இங்கிலாந்து அணி. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் அசத்திய பென் ஸ்டோக்ஸ், ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதனால் டெஸ்ட் தொடர் 1-1 சமனில் உள்ளது. 3-வது டெஸ்ட், மான்செஸ்டரில் ஜூலை 24 அன்று நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ஐசிசி வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் தரவரிசையில் ஹோல்டரைப் பின்னுக்குத் தள்ளி உலகின் நெ.1 ஆல்ரவுண்டர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் ஸ்டோக்ஸ். 2006-ல் ஆண்ட்ரூ பிளிண்டாஃப் முதல் இடத்தைப் பிடித்த பிறகு இந்த உயரத்தை அடைந்த இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் தான். 

அதேபோல பேட்டிங் தரவரிசையில் 3-வது இடத்துக்கு அவர் முன்னேறியுள்ளார். ஸ்டூவர்ட் பிராட், பந்துவீச்சுத் தரவரிசையில் 10-ம் இடம் பிடித்துள்ளார். 

மே.இ. தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர், பந்துவீச்சுத் தரவரிசையில் 3-ம் இடமும் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் 2-ம் இடமும் பிடித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com