நினைத்ததைச் சாதித்த இங்கிலாந்து அணி: 5-ம் நாள் ஆட்டத்தின் ஹைலைட்ஸ் விடியோ

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்டை 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இங்கிலாந்து அணி.
நினைத்ததைச் சாதித்த இங்கிலாந்து அணி: 5-ம் நாள் ஆட்டத்தின் ஹைலைட்ஸ் விடியோ

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்டை 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இங்கிலாந்து அணி.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது மேற்கிந்தியத் தீவுகள் அணி. 2-வது டெஸ்ட் மான்செஸ்டரில் ஜூலை 16 அன்று தொடங்கியது.

டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பாதுகாப்பு விதிமுறைகளை மீறி வீட்டுக்குச் சென்ற ஆர்ச்சர், 2-வது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்டில் விளையாடாத ஜோ ரூட், இங்கிலாந்து அணிக்குத் தலைமை தாங்கியுள்ளார். இங்கிலாந்து அணியில் சாம் கரண், கிறிஸ் வோக்ஸ், பிராட் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். மே.இ. தீவுகள் அணியில் எந்தவொரு மாற்றமும் இல்லை.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 162 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 469 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஸ்டோக்ஸ் 176 ரன்களும் சிப்லி 120 ரன்களும் எடுத்தார்கள். சுழற்பந்துவீச்சாளர் சேஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஃபாலோ ஆனைத் தவிர்த்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, முதல் இன்னிங்ஸில் 99 ஓவர்களில் 287 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 182 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி 4-ம் நாள் முடிவில் 8 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்தது. ள்ளது. ஸ்டோக்ஸ் 16, ரூட் 8 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இந்நிலையில் கடைசி நாளன்று 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது இங்கிலாந்து அணி. பென் ஸ்டோக்ஸ் 57 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 78 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இதனால் மே.இ. தீவுகள் அணி 2-வது டெஸ்டை வெற்றி பெற 312 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

ஆனால், 2-வது இன்னிங்ஸில் மிக மோசமாக விளையாடிய மே.இ. தீவுகள் அணி, 70.1 ஓவர்களில் 198 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. புரூக்ஸ் 62, பிளாக்வுட் 55 ரன்கள் எடுத்தார்கள். பிராட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பென் ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

2-வது டெஸ்டை 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ள இங்கிலாந்து அணி 1-1 என தொடரை சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட், மான்செஸ்டரில் ஜூலை 24 அன்று நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com