கரோனா காரணமாக ரத்தாகிறதா இந்த வருட டிஎன்பிஎல் போட்டி?

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருட டிஎன்பிஎல் போட்டி ரத்தாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரோனா காரணமாக ரத்தாகிறதா இந்த வருட டிஎன்பிஎல் போட்டி?

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருட டிஎன்பிஎல் போட்டி ரத்தாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடம் நடைபெற்ற தமிழ்நாடு ப்ரீமியர் லீக் போட்டியை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வென்றது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் இறுதி ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்த வருட டிஎன்பிஎல் போட்டி ஜூன் 10 முதல் ஜூலை 12-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஜூன் 10-ஆம் தேதி கோவை எஸ்என்ஆா் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஐட்ரீம் திருப்பூா் தமிழன்ஸ் - ரூபி திருச்சி வாரியா்ஸ் அணிகள் மோதும் என அறிவிக்கப்பட்டது. ஜூலை 8-ஆம் தேதி திண்டுக்கல் என்பிஆா் கல்லூரி மைதானத்தில் எலிமினேட்டா், அரையிறுதி 1 ஆட்டமும் ஜூலை 10-ஆம் தேதி திருநெல்வேலி சங்கா் நகா் இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் அரையிறுதி 2 ஆட்டமும் ஜூலை 12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு சங்கா் நகா் இந்தியா சிமெண்ட் மைதானத்தில் இறுதி ஆட்டமும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

டிஎன்பிஎல் போட்டி, கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கடந்த மே மாதம் அறிவித்தது.  புதிய அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த வருட டிஎன்பிஎல் போட்டி சேலம், கோயம்புத்தூர், நத்தம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் நடைபெறவுள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக காலி மைதானங்களில் டிஎன்பிஎல் ஆட்டங்கள் நடைபெறும் என்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ராமசாமி தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த வருட டிஎன்பிஎல் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதலில் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் டிஎன்பிஎல் போட்டியை நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டிருந்தது. ஆனால் தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகமாக உள்ளதால் இந்த வருட டிஎன்பிஎல் போட்டி ரத்தாகவும் வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளதால் அஸ்வின், தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர் போன்ற வீரர்களும் தமிழ்நாட்டில் இருக்க மாட்டார்கள். ஐபிஎல் முடிவடைந்த பிறகு ரஞ்சி கோப்பைப் போட்டி நடைபெறவுள்ளது. இதனால் டிஎன்பிஎல் போட்டி ரத்தாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வருட டிஎன்பிஎல் போட்டி குறித்த அதிகாரபூர்வத் தகவலை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அடுத்தச் சில வாரங்களில் தெரியப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com