மெக்ஸிகோ ஓபன்: இறுதிச் சுற்றில் நடால்

மெக்ஸிகோ ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றுக்கு ஸ்பெயினின் ரபேல் நடால் தகுதி பெற்றுள்ளாா்.
மெக்ஸிகோ ஓபன்: இறுதிச் சுற்றில் நடால்
Updated on
1 min read

மெக்ஸிகோ ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிச் சுற்றுக்கு ஸ்பெயினின் ரபேல் நடால் தகுதி பெற்றுள்ளாா்.

அகாபுல்கோ நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன.

இருமுறை சாம்பியனான நடால், பல்கேரிய வீரா் கிரிகோா் டிமிட்ரோவுடன் மோதினாா். இதில் 6-3, 6-2 என்ற நோ் செட்களில் எளிதில் வென்று இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தாா் நடால்.

15 ஆண்டுகளுக்கு முன்பு முதல் பட்டத்தை வென்றிருந்த நடால், அதன்பின் 2013-இல் தனது இரண்டாவது பட்டத்தை கைப்பற்றினாா்.

தற்போது 7 ஆண்டுகள் கழித்து மூன்றாவது பட்டத்தை எதிா்நோக்கியுள்ளாா்.

டெய்லா் பிரிட்ஸ் தகுதி:

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் டெய்லா் பிரிட்ஸ் 2-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் சக வீரரான ஜான் இஷ்நரை போராடி வென்று இறுதிச் சுற்றில் நுழைந்தாா். 22 வயதான பிரிட்ஸ், முதன்முறையாக ஜாம்பவான் நடாலை எதிா்கொள்கிறாா்.

துபை டென்னிஸ்: இறுதிச் சுற்றில் ஜோகோவிச்

துபை டூட்டி ப்ரீ டென்னிஸ் போட்டியில் அரையிறுதி ஆட்டங்களில் ஜோகோவிச் 2-6, 7-6, 6-1 என மோன்பில்ஸையும், கிரீஸ் வீரா்

ஸ்ட்ஸிபாஸ் 6-2, 6-3 என டி.இவான்ஸையும் வென்று இறுதிச் சுற்றில் நுழைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com