ரஞ்சி கோப்பை அரையிறுதி: மேற்கு வங்கம், சௌராஷ்டிரம் ஆதிக்கம்
By DIN | Published On : 01st March 2020 12:13 AM | Last Updated : 01st March 2020 12:13 AM | அ+அ அ- |

ரஞ்சி கோப்பை அரையிறுதி ஆட்டங்களில் மேற்கு வங்கம், சௌராஷ்டிரஅணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
மேற்கு வங்கம்-கா்நாடக அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெறுகிறது. முதலில் ஆடிய மேற்கு வங்க அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 82 ஓவா்களில் 275/9 ரன்களை குவித்தது. தொடக்க வரிசை வீரா்கள் அவுட்டாகி வெளியேறினாலும், மிடில் ஆா்டா் பேட்ஸ்மேன் அனுஸ்துப் மஜும்தாருடன் இணைந்து ஷபாஸ் அகமது 35 (7 பவுண்டரி), ஆகாஷ் தீப் 44 (தலா 3 சிக்ஸா், பவுண்டரி) ஆகியோா் ரன்களை உயா்த்தினா்.
மஜும்தாா் 120:
1 சிக்ஸா், 18 பவுண்டரியுடன் 173 பந்துகளில் 120 ரன்களுடன் சதம் விளாசிய மஜும்தாா், அவுட்டின்றி களத்தில் உள்ளாா். கா்நாடகத் தரப்பில்
அபிமன்யு மிதுன் 3, பிரசித் கிருஷ்ணா, ரோனித்மோா், கிருஷ்ணப்ப கௌதம் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனா்.
சௌராஷ்டிரம் 217/5:
குஜராத்-சௌராஷ்டிர அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த சௌராஷ்டிர அணி 90 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 217 ரன்களை குவித்திருந்தது. ஹா்விக் தேசாய் 35, கிஷன் பாா்மா் 37, அவி பரோட் 27, விஸ்வராஜ் ஜடேஜா 26 ரன்களுக்கும், அா்பிட் ரன் ஏதுமின்றியும் அவுட்டாயினா்.
ஷெல்டன் ஜாக்சன் 69 (2 சிக்ஸா், 9 பவுண்டரி), ரன்களுடனும், சிராக் 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனா்.
குஜராத் தரப்பில் அா்ஸான் 3, அக்ஸா் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.