கோலியை இப்படி பார்ப்பதற்கு நன்றாக உள்ளது: டிரெண்ட் போல்ட்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அழுத்தம் காரணமாக தவறிழைப்பதைப் பார்ப்பதற்கு நன்றாக உள்ளது என நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிரெண்ட் போல்ட் தெரிவித்துள்ளார்.
கோலியை இப்படி பார்ப்பதற்கு நன்றாக உள்ளது: டிரெண்ட் போல்ட்


இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அழுத்தம் காரணமாக தவறிழைப்பதைப் பார்ப்பதற்கு நன்றாக உள்ளது என நியூஸிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிரெண்ட் போல்ட் தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திலும் டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 242 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 7 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனால், இந்திய அணி வெற்று பெறுவதற்கான சூழல் தென்பட்டது.

ஆனால், இரண்டாவது இன்னிங்ஸ் பேட் செய்த இந்திய அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

இந்நிலையில், 2-வது நாள் ஆட்டத்துக்குப் பிறகு இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த நியூஸிலாந்தின் முதன்மை வேகப்பந்துவீச்சாளர் டிரெண்ட் போல்ட், அழுத்தம் காரணமாக விராட் கோலி தவறு செய்வதைப் பார்க்க நன்றாக இருப்பதாகத் தெரிவித்தார். 

செய்தியாளர்கள் சந்திப்பில் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்ததாவது:

"விராட் கோலி உலகின் தலைசிறந்த வீரர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எனவே, இந்திய அணிக்கு அவர் மிகப் பெரிய வீரர். அவரை பவுண்டரிகள் அடிக்க விடாமல் அவருக்கு போதிய அழுத்தங்களைத் தர முயற்சித்தோம். அவர் சில தவறுகள் செய்வதைப் பார்க்க நன்றாக உள்ளது.

இரண்டு முறை சரியாக அவரது கால் பேட்களுக்கு (Pad) வீசியது எங்களது அதிர்ஷ்டம். அவர் திரும்பச் செல்வதைப் பார்ப்பது நல்ல உணர்வைத் தருகிறது.

அநேகமாக அவர்கள் (இந்திய அணி) இந்தியாவில் மந்தமான ஆடுகளங்களில் விளையாடப் பழகியிருப்பார்களாக இருக்கும். இங்குள்ள ஆடுகளங்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள அவர்களுக்கு நேரம் தேவைப்படுகிறது. நான் இந்தியாவில் பந்துவீசினால், அது எனக்கு வெளிநாட்டு சூழல். அப்படிதான் இதுவும்.   

பந்தின் செயல்பாட்டைப் பார்க்கும்போது நாங்கள் நல்ல நிலையில் இருப்பதாக உணர்கிறேன். பந்துவீச்சாளர்கள் அனைவரும் ஒரு அணியாக இணைந்து விக்கெட் வீழ்த்துவதைக் கண்டு மகிழ்கிறோம். எதிரணியை எந்த வகையில் எதிர்கொண்டு செயல்பட முயற்சிக்கவுள்ளோம் என்பதில் பந்துவீச்சாளர்கள் மிகவும் தெளிவாகவே உள்ளனர்" என்றார்.

இந்த டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய போல்ட், இரண்டாவது இன்னிங்ஸில் இதுவரை 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com