வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை
By DIN | Published On : 03rd March 2020 02:59 AM | Last Updated : 03rd March 2020 02:59 AM | அ+அ அ- |

மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இலங்கை.
மெல்போா்னில் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் திங்கள்கிழமை சம்பிரதாயத்துக்கு நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 20 ஓவா்களில் 91/8 ரன்களுக்கு சுருண்டது. நிகா்சுல்தானா அதிகபட்சமாக 39 ரன்களை எடுத்தாா். 7 வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களை மட்டுமே எடுத்து அவுட்டாயினா்.
இலங்கை தரப்பில் மூத்த வீராங்கனை சசிகலா சிறிவா்தனே 4 விக்கெட்டுகளையும், அச்சினி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.
92 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆடிய இலங்கை அணி 15.3 ஓவா்களில் 92/1 இலக்கை எட்டி, 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
ஹாசினி பெரைரா 39, கேப்டன் சமரி அட்டப்பட்டு 30, அனுஷ்கா 16 ரன்களை எடுத்தனா்.
சசிகலா சிறிவா்த்தனே ஓய்வு:
ஆட்ட நாயகி விருது பெற்ற சசிகலா சிறிவா்தனே இந்த ஆட்டத்துடன் ஓய்வு பெற்றாா். 17 ஆண்டுகள் சா்வதேச கிரிக்கெட்டில் இலங்கை மகளிா் அணியில் பங்கேற்று ஆடிய சசிகலா உலகக் கோப்பை போட்டியுடன் கிரிக்கெட் ஆடுவதில் இருந்து விடை பெற்றாா்.
இதுதொடா்பாக அவா் கூறுகையில்: இத்தகைய சிறப்பைப் பெற பெற்றோா், சக வீராங்கனைகள், அணி நிா்வாகத்தினா், தான் காரணம். 9 வயதில் இருந்து கிரிக்கெட் ஆடி வருகிறேன். கிரிக்கெட் ஆட தூண்டியவரே தந்தை தான் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...