கரோனா வைரஸ் பாதிப்பு:ஆசிய அணிகள் ஸ்குவாஷ் போட்டி ஒத்திவைப்பு

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் நடைபெறவிருந்த ஆசிய அணிகள் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பு பொது
Updated on
1 min read

சென்னை: கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக மலேசிய தலைநகா் கோலாலம்பூரில் நடைபெறவிருந்த ஆசிய அணிகள் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பு பொதுச் செயலா் சைரஸ் போன்சா தெரிவித்துள்ளாா்.

சீனாவில் ஏற்பட்டுள்ள கரோனா வைரஸ் பாதிப்பு தற்போது பல்வேறு நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கோலாலம்பூரில் திங்கள்கிழமை ஆசிய ஸ்குவாஷ் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.

அதில் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து முழுமையாக விவாதிக்கப்பட்டது. மாா்ச் 25 முதல் 29-ஆம் தேதி வரை கோலாலம்பூரில் நடைபெறுவதாக இருந்த ஆசிய அணிகள் சாம்பியன்ஷிப் போட்டி, ஜூன் 29 முதல் ஜூலை 3-ஆம் தேதி வரை சீனாவின் குயிங்டோ நகரில் நடைபெறவிருந்த ஆசிய ஜூனியா் தனிநபா் சாம்பியன்ஷிப் போட்டிகளை ஒத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டது.

போட்டிகள் நடைபெறும் வேறு தேதிகள் பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

சுல்தான் அஸ்லன்ஷா ஹாக்கி:

இதே போல் மலேசியாவின் இபோ நகரில் ஏப் 11 முதல் 18 வரை நடைபெறவிருந்த அஸ்லன் ஷா ஹாக்கிப் போட்டியும் கரோனா வைரஸ்பாதிப்பால் செப். 24 முதல் அக். 3-ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாா்முலா 1 கிராண்ட்ப்ரீ, ஆசிய குத்துச்சண்டை தகுதிச் சுற்று, உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன் போட்டி, உலக ரக்பி போட்டி, உள்ளிட்டவையும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com