சர்வதேச கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளருக்கு கரோனா வைரஸ்

செல்சேகால்பந்து வீரர் மற்றும் ஆர்சனால் தலைமைப் பயிற்சியாளருக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதிபடுத்தப்பட்டது.
சர்வதேச கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளருக்கு கரோனா வைரஸ்

செல்சேகால்பந்து வீரர் மற்றும் ஆர்சனால் தலைமைப் பயிற்சியாளருக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதிபடுத்தப்பட்டது.

செல்சே கால்பந்து கிளப் அணியின் வீரர் கேலம் ஹுட்ஸன் உடோய் மற்றும் ஆர்சனால் கால்பந்து கிளப் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைகெல் ஆர்தேதா ஆகியோருக்கு கரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கால்பந்து பிரீமியர் லீக்கைச் சேர்ந்த ஒரு வீரருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதுவே முதன்முறையாகும்.

வியாழக்கிழமை அன்று கரோனா அறிகுறிகள் தீவிரமானதையடுத்து இருவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டனர். இதன் முடிவில் இருவருக்கும் கரோனா வைரஸ் (கொவைட்-19) நோய் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து இருவரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், அந்தந்த நாடுகளின் சட்டப்படி இருவருடனும் சமீபகாலத்தில் இணைந்து பழகிய அனைவரும் அடுத்த 14 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட உள்ளனர். இதில் உறவினர்கள், அணி வீரர்கள், நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரும் அடங்குவர். மேலும் அவர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனையும் நடத்தப்பட உள்ளது. 

இதனால் இரு அணிகளும் குறிப்பிட்ட காலகட்டத்துக்குள்ளாக அடுத்தடுத்து வரும் போட்டித் தொடர்களில் பங்கேற்பது கேள்விக்குரியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com