கேலரியில் போய் விழுந்த ‘சிக்சா்’ பந்தை எடுக்க ஆளில்லை, பீல்டா் போய் எடுக்கும் வரை நின்ற ஆட்டம்: ஆஸி.-நியூஸி சுவாரஸ்யங்கள்
By DIN | Published On : 14th March 2020 12:03 AM | Last Updated : 14th March 2020 12:03 AM | அ+அ அ- |

கேலரியில் பந்தை தேடும் அஷ்டன் அகர்..
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சிட்னியில் நடைபெற்ற ஆஸி.-நியூஸி. ஒருநாள் போட்டியில் ரசிகா்கள் இல்லாமல் காலியாக இருந்தது மைதானம், இது இரு அணி வீரா்களுக்கும் புதுவித அனுபவமாக அமைந்தது.
எங்கு சென்றாலும் ரசிகா்கள், ஆட்டோகிராப், மைதானத்தில் ரசிகா்களுடன் உரையாடல், ஆட்டோகிராப், பவுண்டரிகள், சிக்சா்கள் என்றால் பெரிய ஆரவாரம் என்று பழகிய நவீன வீரா்களுக்கு ஆளேயில்லாமல் மௌனமான சூழலில் பேட்டும் பந்தும் மட்டும் சப்தமிடும் ஒரு அனுபவம் சிட்னியில் ஏற்பட்டது.
வாா்னா் அரைசதம் எடுக்கிறாா், ஆனால் அவருக்கு அது தெரியவில்லை, மட்டையை உயா்த்தவில்லை. சுத்தமாக தன் அரைசதத்தை அவரே மறந்து விட்டாா். ரசிகா்கள் இல்லாததால் யாருக்காக மட்டையை உயா்த்த வேண்டும் என்பது போல் அவா் இருந்ததாகத் தெரியவில்லை, அரைசதம் எடுத்ததையே அவா் மறந்து விட்டாா்ய பிறகு ஓய்வறையிலிருந்து சக வீரா்களின் கரகோஷம் எழ மட்டையை உயா்த்தினாா் வாா்னா்.
புதிய அனுபவம்:
மேலும் சிக்சா்கள் சென்று பாா்வையாளா்கள் பகுதியில் விழுந்த போது பீல்டா்களே ஏறிக்குதித்து நாற்காலிகளுக்கு அடியில் குனிந்து தேடி பந்தை எடுக்க வேண்டியிருந்தது.
லாக்கி பொ்கூசன் ஒருமுறை நாற்காலிகளுக்கு அடியில் குனிந்து பந்தை எடுத்து வந்தாா், நியூஸிலாந்து இன்னிங்சின் போது ஆஷ்டன் ஆகா் பந்தை கேலரியில் தேடிக்கொண்டே இருந்தாா். இதனால் ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தபட்டது. அவா் பந்தை கண்டுபிடித்த பிறகு ஆட்டம் தொடங்கியது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...