ஐஎஸ்எல் கால்பந்து இறுதி: 3 கோல் அடித்து 3வது முறையாக சாம்பியன் ஆனது ஏடிகே

​ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைய அதலெட்டிகோ கொல்கத்தா எஃப்சி அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
ஐஎஸ்எல் கால்பந்து இறுதி: 3 கோல் அடித்து 3வது முறையாக சாம்பியன் ஆனது ஏடிகே


ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைய அதலெட்டிகோ கொல்கத்தா எஃப்சி அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

இந்தியன் கால்பந்து சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) தொடரின் இறுதி ஆட்டம் கோவாவில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆட்டம் மைதானத்தில் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற்றது.

ஆட்டம் தொடங்கிய 10-வது நிமிடத்திலேயே ஏடிகே அணியின் ஜாவி ஹெர்னாண்டஸ் முதல் கோலை அடித்து அசத்தினார். இதன்பிறகு, முதல் பாதி ஆட்டத்தில் சென்னை அணியின் கோல் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. இதனால், முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஏடிகே அணி 1-0 என முன்னிலை வகித்தது.

2-வது பாதி ஆட்டம் தொடங்கியதும் ஏடிகே அணி மீண்டும் தொடக்கத்திலேயே ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கியது. 48-வது நிமிடத்தில் ஏடிகே அணியின் எடு கார்சியா அந்த அணிக்கான 2-வது கோலை அடித்தார். இரண்டு கோல்கள் பின்தங்கியிருந்ததால் சென்னையின் எஃப்சி அணியின் நெருக்கடி மேலும் அதிகரித்தது.

இதைத் தொடர்ந்து, ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் சென்னையின் எஃப்சி வீரர் வால்ஸ்கிஸ் அணியின் முதல் கோலை அடித்தார். எனவே, இதன்பிறகு இறுதி ஆட்டம் சூடு பிடிக்கத் தொடங்கியது. ஆனால், சென்னையின் கோல் அடிக்கும் முயற்சிகள் மீண்டும் தோல்வியிலேயே முடிந்தன.

இதையடுத்து, கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. இதில், சென்னையின் எஃப்சி அணி கோல் அடித்து சமன் செய்யுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏடிகே அணிக்கான முதல் கோலை அடித்த ஜாவி ஹெர்னாண்டஸ் மீண்டும் ஒரு கோலை அடித்து அசத்தினார். இதன்மூலம், ஏடிகே அணி 3-1 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.

தொடர்ந்து, கூடுதலாக 2 நிமிடங்கள் வழங்கப்பட்டன. அதிலும் சென்னையின் எஃப்சி அணி கோல் அடிக்கவில்லை. இதன்மூலம், ஏடிகே அணி இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com