நியூஸி. அரசின் புதிய அறிவிப்பினால் ஆஸி. - நியூஸி. கிரிக்கெட் தொடர்கள் ஒத்திவைப்பு!

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் ஆஸ்திரேலியாவிலிருந்து நியூஸிலாந்து நாட்டுக்கு நுழைபவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்படுவார்கள் என்று
நியூஸி. அரசின் புதிய அறிவிப்பினால் ஆஸி. - நியூஸி. கிரிக்கெட் தொடர்கள் ஒத்திவைப்பு!

ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து இடையிலான ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய ஆஸி. அணி 258/7 ரன்களைக் குவித்தது. பின்னா் ஆடிய நியூஸிலாந்து, 41 ஓவா்களிலேயே 187 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 71 ரன்கள் வித்தியாசத்தில் முதல் ஒருநாள் ஆட்டத்தில் வென்றது ஆஸ்திரேலியா.

இந்நிலையில் கரோனா ஆபத்து காரணமாக ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து இடையிலான ஒருநாள் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் மீதமுள்ள இரு ஆட்டங்களில் வேறொரு தேதியில் நடைபெறும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஒருநாள் தொடருக்குப் பிறகு நியூஸிலாந்தில் நடைபெறுவதாக இருந்த டி20 தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் ஆஸ்திரேலியாவிலிருந்து நியூஸிலாந்து நாட்டுக்கு நுழைபவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்படுவார்கள் என்று நியூஸிலாந்து அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து இடையிலான ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நியூஸிலாந்து அரசின் அறிவிப்பினால் ஆஸ்திரேலியாவில் உள்ள நியூஸிலாந்து வீரர்கள் இன்று மாலை உடனடியாக நாடு திரும்புகிறார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com