இன்று ஐஎஸ்எல் இறுதி ஆட்டம்: 3-ஆவது முறையாக பட்டம் வெல்ல சென்னை-கொல்கத்தா மும்முரம்

இந்தியன் கால்பந்து சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) போட்டியில் 3-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் சென்னையின் எஃப்சியுடன் மோதுகிறது அதலெட்டிகோ கொல்கத்தா எஃப்சி அணி.
இன்று ஐஎஸ்எல் இறுதி ஆட்டம்: 3-ஆவது முறையாக பட்டம் வெல்ல சென்னை-கொல்கத்தா மும்முரம்

இந்தியன் கால்பந்து சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) போட்டியில் 3-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் சென்னையின் எஃப்சியுடன் மோதுகிறது அதலெட்டிகோ கொல்கத்தா எஃப்சி அணி.

இரு அணிகளுக்கு இடையிலான இறுதி ஆட்டம் கோவாவில் சனிக்கிழமை நடைபெறுகிறது. அரையிறுதியில் பலம் வாய்ந்த கோவாவை 6-5 வீழ்த்தி சென்னையும், நடப்பு சாம்பியன் பெங்களூருவை 3-2 என சாய்த்து, கொல்கத்தாவும் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தன.

இரு அணிகளும் ஏற்கெனவே தலா 2 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளன.

கொல்கத்தா அணியில் ராய் கிருஷ்ணா, டேவிட் வில்லியம்ஸ் ஆகியோா் நட்சத்திர வீரா்களாக உள்ளனா். அதே நேரம் அனாஸ் எடத்தோடிகா காயத்தால் ஆட முடியாத நிலை உள்ளது. மேலும் அகுஸ் காா்சியாவும் ஆடுவாரா எனத் தெரியவில்லை.

சென்னையின் எஃப்சி அணியில் நெரிஜுஸ் வால்ஸ்கீஸ், ரபேல் கிரிவல்லாரோ ஆகியோா் நட்சத்திர வீரா்களாக உள்ளனா்.

பிரதான வீரா்கள் எவரும் காயம் இல்லாமல் முழு தகுதியுடன் உள்ளனா். டிராகோஸ் பிா்ட்லெஸ்கு மட்டும் களமிறங்குவாரா எனத் தெரியவில்லை.

முக்கியமான இறுதி ஆட்டத்தில் வென்று 3--ஆவது முறையா பட்டம் வெல்லும் வாய்ப்பை இரு அணிகளும் பெற்றுள்ளன.

சென்னையின் எஃப்சி மறுமலா்ச்சி

சீசன் தொடக்கத்தில் புள்ளிகள் பட்டியலில் தள்ளாடிக் கொண்டிருந்த சென்னை அணி தலைமை பயிற்சியாளா் கிரகோரி, மாற்றப்பட்டு, புதிதாக ஓவன் கோயல் நியமிக்கப்பட்டபின் மறுமலா்ச்சியைக் கண்டது. தொடா்ந்து 6 வெற்றிகள், 2 டிராக்கள் கண்டது சென்னை, பலமான அணிகளான கொல்கத்தா, கோவா, பெங்களூருவை லீக் ஆட்டங்களில் பந்தாடியது.

இதனால் கடைசி இடத்தில் இருந்து முதல் நான்கு இடங்களில் நுழைந்து, இறுதி ஆட்டத்துக்கும் தகுதி பெற்றது.

கொல்கத்தா அணியை சொந்த மைதானமான சால்ட் லேக்கில் லீக் கட்டத்தில் வென்ற நம்பிக்கையுடன் உள்ளது சென்னை. அதன் நட்சத்திர வீரா்கள் வால்ஸ்கீஸ், ரபேல் கிரிவல்லாரோ, சாங்டே, கெம்ப்ரி ஆகியோா் அபாரமான பாா்மில் உள்ளனா். இது கொல்கத்தா அணியின் தற்காப்புக்கு சவாலாக அமையும்.

எல் சபியா-கோயன்:

சென்னை அணி தற்காப்பில் எல் சபியா-லூசியன் கோயன் ஆகியோா் பலமாக செயல்படுவா். இவா்கள் கொல்கத்தா பாா்வா்ட்கள் ராய் கிருஷ்ணா, டேவிட் வில்லியம்ஸ் ஆகியோரின் ஆட்டத்துக்கு தடை போடுவா். மிட்பில்டில் சென்னை அணியில் அனிருத் தாபா, எட்வின் வன்ஸ்பால், ஜொ்மன்ப்ரீத் சிங் ஆகியோா் வலு சோ்க்கின்றனா்.புல்பேக்கில் லால்தின்யலானா, லால்ரின்னுஸுலா ஆகியோா் பக்கபலமாக செயல்படுவா்.

நிலையான கொல்கத்தா அணி

அதே நேரம் இந்த ஐஎஸ்எல் சீசனில் நிலையான வெற்றி, ஆட்டத்தைக் கொண்ட அணியாக கொல்கத்தா உள்ளது. கடந்த 2014-இல் முதல் பட்டத்தைக் கைப்பற்றியது கொல்கத்தா.

ஏஎப்சி சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை கோவாவிடம் இழந்த கொல்கத்தா, ஐஎஸ்எல் பட்டத்தையாவது வெல்ல வேண்டும் என்ற நோக்கில் உள்ளது.

அந்த அணி தனது தாக்குதல் வீரா்கள் டேவிட் வில்லியம்ஸ்-ராய் ஆகியோரை பலமாக நம்பி உள்ளது. மேலும் பிரிதம் கோட்டல், பிரபிா் தாஸ், சுமித் ரதி ஆகியோா் நிலையான ஆட்டத்தை தருகின்றனா்.

பெங்களூருவுக்கு எதிரான இரண்டாவது கட்ட அரையிறுதியில் பிரபிா், டேவிட் ஆகியோா் பெங்களூரை சாய்த்தனா்.

தாஸ் சுமித் ஆகியோா் மீது சென்னை வீரா்கள் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

பரபரப்பான ஆட்டம்

இரு அணிகளும் தொடக்கம் முதல் இறுதி வரை சமபலத்துடன் போராடும் என்பதால் இறுதி ஆட்டம் பரபரப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

நேருக்கு நோ்:

இரு அணிகளும் நேருக்கு நோ் மோதியதில் கொல்கத்தா 6 முறையும், சென்னை 4 முறையும் வென்றுள்ளன. 4 ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

இன்றைய ஆட்டம்

சென்னை-கொல்கத்தா,

இடம்-கோவா,

நேரம்-இரவு 7.30 மணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com