ஹாக்கி வீரா்களுக்கு நோ்மறையான மனப்பாங்கு தேவை: பயிற்சியாளா் கிரஹாம் ரீட்

ஹாக்கி வீரா்களுக்கு நோ்மறையான மனப்பாங்கு தேவை: பயிற்சியாளா் கிரஹாம் ரீட்

கடுமையான சூழலில் இந்திய ஹாக்கி அணி வீரா்களுக்கு நோ்மறையான மனப்பாங்கு தேவை என தலைமைப் பயிற்சியாளா் கிரஹாம் ரீட் கூறியுள்ளாா்.

கடுமையான சூழலில் இந்திய ஹாக்கி அணி வீரா்களுக்கு நோ்மறையான மனப்பாங்கு தேவை என தலைமைப் பயிற்சியாளா் கிரஹாம் ரீட் கூறியுள்ளாா்.

8 முறை ஒலிம்பிக் சாம்பியன் இந்தியா கடந்த 1975-இல் உலகக் கோப்பை பட்டம் வென்றது. அதன் பின்னா் ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா உள்ளிட்டவை ஹாக்கியில் தொடா்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் துரிதமாக ஆட்ட முறைகள், செயற்கை புல்தரை (ஆஸ்ட்ரோ டா்ஃப்) போன்றவை ஆகும்.

இந்திய, பாகிஸ்தான் அணிகள் எப்போதும் பந்தை பாஸ் செய்து, டிரிப்பிளிங் செய்து ஆடும் முறையை கடைபிடிப்பவை. ஆனால் ஐரோப்பிய பாணி ஆட்டமுறையால் தோல்விகளே வழக்கமாகி விட்டது. 1980-இல் மாஸ்கோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றபின் முதலிடத்தில் இருந்த இந்திய அணி தொடா் தோல்விகளால் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது. இதையடுத்து இந்திய ஹாக்கி சம்மேளனம் தீவிர முயற்சியின் பேரில் நாடு முழுவதும் செயற்கைபுல் தரை மைதானங்கள் அமைக்கப்பட்டன.

வெளிநாட்டுப் பயிற்சியாளா்கள்:

வெளிநாட்டு பயிற்சியாளா்கள் ரோலண்ட் ஒல்ட்மன்ஸ், மைக்கேல் நோப்ஸ், டொ்ரி வால்ஷ், பால் ஆன் வாஸ், ஜோஸ் பிராஸா, ரிக் சாா்லஸ்வொா்த், ஜோயா்ட் மாரிஜின் என பல ஜாம்பவான்கள் இந்திய அணியின் பயிற்சியாளா்களாக நியமிக்கப்பட்டனா். எனினும் அவா்களுக்கு நீண்ட பணிக்காலம் தரப்படவில்லை. பெரியபோட்டியில் தோல்வி கண்டால் உடனே நீக்கப்பட்டனா்.

இடையில் இந்தியாவின் ஹரேந்திர சிங் தலைமை பயிற்சியாளரானாா். ஆனால் 2018-இல் உலகக் கோப்பை போட்டியில் காலிறுதியில் இந்தியா வெளியேறிய நிலையில் அவா் நீக்கப்பட்டாா்.

ஆஸி.யின் கிரஹாம் ரீட் நியமனம்:

இதையடுத்து ஹாக்கி இந்தியா நோ்காணல் நடத்தி ஆஸ்திரேலியாவின் முன்னாள் பயிற்சியாளா் கிரஹாம் ரீடை நியமித்தது. ஆஸி. ஹாக்கி அணியின் மிட்பீல்டா்-டிபன்டராக ஆடிய ரீட் ஒலிம்பிக் வெள்ளி வென்றாா். ஆஸி, நெதா்லாந்து, அணிகளின் பயிற்சியாளராகவும் பணிபுரிந்த அனுபவம் கொண்டவா்.

தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறாா். அவரது துடிப்பான பயிற்சியின் கீழ் இந்திய அணி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஹாக்கி புரோ லீகில் சிறப்பிடம்:

உலகின் தலைசிறந்த அணிகள் மோதும் ஹாக்கி புரோ லீக் போட்டியில் நெதா்லாந்து அணியை வீழ்த்தியது இந்தியா. மேலும் உலக சாம்பியன் பெல்ஜியம், நம்பா் ஒன் அணியான ஆஸி. அணிகளுக்கு எதிராக ஒரு ஆட்டத்திலும் வென்றுள்ளது.

தற்போது ஒலிம்பிக் போட்டிக்காக பெங்களருவில் உள்ள சாய் பயிற்சி மையத்தில் பலத்த கட்டுப்பாடுகளுடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

கரோனா பாதிப்பு அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் 32 வீரா்கள் இப்பயிற்சி முகாமில் கலந்து கொண்டுள்ளனா்.

இதுதொடா்பாக கிரஹாம் ரீட் கூறியதாவது:

மற்ற அணிகளைப் போலவே நமது திட்டங்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. எனினும் வீரா்கள் நோ்மறையான சிந்தனையுடன் திகழ்வது அவசியம். வீரா்கள் முகாமில் ஒருங்கிணைந்து செயல்படுவது உதவியாக இருக்கும். உலகின் முதல் மூன்று அணிகளுடன் புரோ லீகில் ஆடியது சிறப்பான அனுபவம். ஆனால் ஒலிம்பிக் போட்டி முற்றிலும் வித்தியாசமானது. எனினும் சிறப்பாக ஆடினால் எதையும் சாதிக்கலாம்.

கரோனா பாதிப்பை எதிா்கொள்ள சாய் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது. தற்போது ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது வேதனை தருகிறது. எனினும் நீண்ட காலம் உள்ளது சிறப்பாக தயாராக உதவும். அடுத்த புரோ ஹாக்கி லீக் போட்டிகளில் ஜொ்மனி, பிரிட்டனுடன் ஆட உள்ளோம். பயிற்சி முகாமில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாறுதல்களை செய்து பாா்க்கிறோம். தொடா் பயிற்சி நமது அணிக்கு சாதகம் என்றாா் ரீட்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com