ஓய்வுக் காலத்தில் குதிரையேற்றப் பயிற்சியில் ஈடுபடும் ஜடேஜா (விடியோ)
By எழில் | Published On : 31st March 2020 01:32 PM | Last Updated : 31st March 2020 01:32 PM | அ+அ அ- |

கரோனாவால் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் கிடைத்த ஓய்வில் குதிரையேற்ற பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் பிரபல கிரிக்கெட் வீரர் ஜடேஜா.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கரோனா வைரஸால் உலகம் முழுக்க 37,000 மக்கள் இறந்துள்ளார்கள். கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கிய ஊரடங்கு, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். கரோனா வைரஸ் சூழல் தொடா்பாக நாட்டு மக்களுக்கு ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக உரையாற்றியபோது இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமா் மோடி, அந்த நோய்த் தொற்றுக்கு எதிரான உறுதியான போரில் இது மிக அவசியமான நடவடிக்கை என்று கூறியுள்ளாா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 1200 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் கிடைத்த ஓய்வில், தான் குதிரை ஓட்டி வருவதாகக் கூறியுள்ளார் ஜடேஜா. வீட்டின் அருகே உள்ள பகுதியில் குதிரையேற்றப் பயிற்சியில் ஈடுபடும் விடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார். குதிரையின் மேலே ஜடேஜா அமர்ந்திருக்க, சிட்டாகப் பறக்கிறது குதிரை. இந்த விடியோவை ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
My all time favourite pic.twitter.com/DjQWAP6Cze
— Ravindrasinh jadeja (@imjadeja) March 31, 2020

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...