குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, மூன்று முறை தற்கொலை செய்துகொள்ள யோசித்ததாக இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஷமி கூறியுள்ளார்.
2018-ம் ஆண்டு, கிரிக்கெட் வீரர் ஷமியின் குடும்ப வாழ்க்கையில் பூகம்பம் ஏற்பட்டது. அவருடைய மனைவி ஹசின் ஜஹான், ஷமி மீது பல்வேறு அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுக்களை அடுக்கினார். ஷமிக்குப் பல பெண்களுடன் தொடர்பு உள்ளது என்றும் தன்னை ஓயாது துன்புறுத்துவதாகவும் சமூகவலைத்தளங்களில் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டார். ஷமி - ஹசின் ஆகிய இருவரும் 2014-ல் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
ஹசின் அளித்த புகாரின் பேரில் ஷமி மற்றும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது கொல்கத்தா காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. நீதிமன்றத்தில் ஷமி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்ஸ்டகிராம் தளத்தில் ரோஹித் சர்மாவுடனான உரையாடலில் ஷமி கூறியதாவது:
எந்தவொரு பிரச்னை இருந்தாலும் அதற்கு ஒரு தீர்வு உள்ளது என என் குடும்பத்தினர் கூறினார்கள். என் சகோதரர் எனக்கு ஆதரவாக இருந்தார். என் குடும்பம் அப்போது எனக்கு உறுதுணையாக இல்லாமல் போயிருந்தால் கிரிக்கெட் வாழ்வை நான் இழந்திருப்பேன். குடும்பப் பிரச்னை மற்றும் மன உளைச்சலால் தற்கொலை செய்துகொள்ளலாமா என்று கூட மூன்று முறை யோசித்துள்ளேன்.
பிரச்னை உருவானபோது கிரிக்கெட் பற்றி நான் யோசிக்கவேயில்லை. நாங்கள் 24-வது மாடியில் வசித்து வந்தோம். பால்கனியிலிருந்து நான் கீழே குதித்துவிடுவேன் என என் குடும்பத்தினர் அஞ்சினார்கள்.
என்னுடன் 24 மணி நேரமும் 2-3 நண்பர்கள் கூடவே இருந்தார்கள். இந்தச் சூழலில் இருந்து விடுபட, எதைப் பற்றியும் யோசிக்காமல் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தும்படி என் குடும்பத்தினர் கூறினார்கள். பிறகுதான் கடுமையாகப் பயிற்சில் ஈடுபட்டேன் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவு

ஆம்பூரில் நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளா்கள்

வாக்காளா்களை வரவேற்ற ரோபோ!

வரிசையில் நின்று வாக்களித்த திருப்பத்தூா் ஆட்சியா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


