தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இந்திய மகளிர் அணியை யாரும் எளிதாக எடுத்துக் கொள்வதில்லை: மிதாலி ராஜ்

இந்திய மகளிர் அணியை முன்பு போல யாரும் எளிதாக எடுத்துக்கொள்வதில்லை என மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் கூறியுள்ளார்

News image
Updated On :4 மே 2020, 12:06 pm

இந்திய மகளிர் அணியை முன்பு போல யாரும் எளிதாக எடுத்துக்கொள்வதில்லை என மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் கூறியுள்ளார்

ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

இப்போதெல்லாம் இந்திய மகளிர் அணியை எந்த எதிரணியும் எளிதாக எடுத்துக்கொள்வதில்லை. தங்களை நன்குத் தயார்ப்படுத்திக்கொண்டு வருகிறார்கள்.

ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவையும் டி20யில் இங்கிலாந்தையும் வீழ்த்தி இதர அணிகளுக்குச் சவாலை ஏற்படுத்தியுள்ளோம். இதன்மூலம் எந்த அணியையும் வீழ்த்த முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

ஊரடங்குச் சமயத்தில் பயிற்சி எடுத்துக்கொள்வது பற்றி அவர் கூறியதாவது:

எல்லோராலும் சுலபமாகப் பயிற்சிகள் எடுக்க முடிவதில்லை. அவரவருக்கு உள்ள இடத்துக்கு ஏற்றவாறு பயிற்சிகளைக் கற்றுத் தந்துள்ளார்கள். பயிற்சியாளர் ராமன் சார் அதற்குரிய வித்தியாசமான யோசனைகளைக் கூறி வருகிறார்.

என்னதான் உள் அரங்கில் பயிற்சி எடுத்தாலும் மைதானத்தில் பயிற்சி எடுப்பது போல வராது என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.