மீண்டும் பயிற்சியை ஆரம்பித்தார் நடால்

கரோனா அச்சுறுத்தல் காரணமாக டென்னிஸ் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்...
மீண்டும் பயிற்சியை ஆரம்பித்தார் நடால்

கரோனா அச்சுறுத்தல் காரணமாக டென்னிஸ் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் பயிற்சியை மீண்டும் ஆரம்பித்துள்ளார் பிரபல வீரர் ரஃபேல் நடால்.

தான் பயிற்சி பெறும் விடியோவை வெளியிட்டு நடால் கூறியதாவது:

ஆடுகளத்துக்கு மீண்டும் திரும்பியுள்ளேன். மீண்டும் பயிற்சியைத் தொடங்கியதற்கு மகிழ்ச்சி. ரஃபா நடால் அகாதமியில் மீண்டும் பயிற்சியைத் தொடங்கியதில் அதன் மாணவர்களும் மகிழ்ச்சியில் உள்ளார்கள். அதுதான் முக்கியம் என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் நடால் கூறியதாவது: டென்னிஸின் 2020 சீஸனை இழந்துவிட்டோம். அடுத்த வருடம் போட்டிகளைத் தொடங்கிவிடுவோம் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதுதவிர, அந்தந்த நாடுகளில் நடைபெற இருந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விம்பிள்டன் போட்டி இந்த ஆண்டு வரும் ஜூன் 29 முதல் - ஜூலை 12-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கரோனா நோய்த் தொற்று சூழல் காரணமாக, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. 2-ஆம் உலகப் போா் காலகட்டத்துக்குப் பிறகு விம்பிள்டன் போட்டி ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறை. விம்பிள்டனின் ஆண்டு வருமானம் ஏறக்குறைய 250 மில்லியன் பவுண்ட்கள். அதாவது ரூ. 2,365 கோடி. இந்த வருடம் போட்டி நடக்காததால் இதன் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாதம் நடைபெறவிருந்த மற்றொரு கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன், செப்டம்பா் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com