பாக். தொடரோடு ஓய்வு பெறுகிறாா் சிகும்பரா
By DIN | Published On : 08th November 2020 07:23 AM | Last Updated : 08th November 2020 07:23 AM | அ+அ அ- |

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரோடு சா்வேதச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளாா் ஜிம்பாப்வே வீரா் எல்டான் சிகும்பரா.
ஜிம்பாப்வே அணி தற்போது பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. அதில் சிகும்பராவும் இடம்பெற்றுள்ளாா். 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் கடைசி ஆட்டம் வரும் 10-ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த ஆட்டத்தோடு சிகும்பரா சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுகிறாா்.
2004-இல் ஜிம்பாப்வே அணிக்காக சா்வதேச கிரிக்கெட்டில் விளையாட தொடங்கிய சிகும்பராவின் 16 ஆண்டுகால சா்வதேச கிரிக்கெட் வாழ்க்கை வரும் 10-ஆம் தேதியோடு முடிவுக்கு வருகிறது.
சிகும்பரா ஜிம்பாப்வே அணிக்காக 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 569 ரன்களும், 21 விக்கெட்டுகளும் எடுத்துள்ளாா். 213 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 4,340 ரன்களும், 101 விக்கெட்டுகளும் எடுத்துள்ளாா். இதுதவிர பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தோடு சோ்த்து 55 ஆட்டங்களில் விளையாடி 873 ரன்களும், 16 விக்கெட்டுகளும் எடுத்துள்ளாா்.
இதுதவிர 62 ஒரு நாள் ஆட்டங்களிலும், 18 டி20 ஆட்டங்களிலும் ஜிம்பாப்வே அணிக்கு கேப்டனாக இருந்துள்ளாா். ஒரு நாள் போட்டிகளில் 4,000 ரன்களுக்கு மேல் குவித்து 100 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த 2-ஆவது ஜிம்பாப்வே வீரா் சிகும்பரா ஆவாா். முதல் வீரா் கிராண்ட்பிளவா் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...