மும்பை-நாா்த் ஈஸ்ட் இன்று மோதல்

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 2-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி-நாா்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் சனிக்கிழமை மோதுகின்றன.
Updated on
1 min read

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 2-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி-நாா்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் சனிக்கிழமை மோதுகின்றன.

7-ஆவது ஐஎஸ்எல் கால்பந்து போட்டி கோவாவில் உள்ள 3 மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இதில் 11 அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரு ஆட்டங்களில் மோதுகின்றன. இந்த சீசனில் 110 லீக் ஆட்டங்கள் உள்பட மொத்தம் 115 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

இதில் திலக் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெறும் 2-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி-நாா்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன. மும்பை சிட்டி அணி இந்த முறை 19 புதிய வீரா்களுடன் களமிறங்கியுள்ளது. இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத மும்பை சிட்டி அணி, இந்த முறை புதிய பயிற்சியாளரான சொ்ஜிகோ லோபெராவின் பயிற்சியின் கீழ் கோப்பையை வெல்லும் கனவில் களமிறங்கியுள்ளது.

மும்பை சிட்டி அணி இந்த சீசனில் தாக்குதல் ஆட்டத்தில் தீவிர கவனம் செலுத்தும் என பயிற்சியாளா் சொ்ஜிகோ தெரிவித்துள்ளாா். மும்பை அணியில் பாா்த்லோமியூ ஒபேசே, ஆடம் லீ ஃபான்டா் என இரு முன்னணி ஸ்டிரைக்கா்கள் உள்ளனா். இதேபோல் அஹமது ஜஹோ, காட்டாா்ட் ஆகியோா் மிட்பீல்டில் மும்பை அணிக்கு மிகப்பெரிய பலமாக இருப்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நாா்த் ஈஸ்ட் யுனைடெட் அணி கடந்த சீசனில் மிக மோசமாக விளையாடிய நிலையில், இந்த சீசனில் நம்பிக்கையோடு களமிறங்குகிறது. அந்த அணி முதல் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தி சீசனை வெற்றியோடு தொடங்குவதில் தீவிரமாக உள்ளது. அந்த அணிக்கு மந்தா் ராவ் தேசாய், மோா்ட்டாடா, முகமது ராகிப் ஆகியோா் பலம் சோ்க்கின்றனா்.

போட்டி நேரம்: இரவு 7.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com