விளையாட்டு செய்தி துளிகள்
By DIN | Published On : 23rd November 2020 09:00 AM | Last Updated : 23rd November 2020 09:00 AM | அ+அ அ- |

* ரோஹித் மற்றும் இஷாந்த் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டும் என்றால், ஆஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்படும் காலத்தை கருத்தில் கொண்டு அடுத்த 3- 4 நாள்களில் ஆஸ்திரேலியா வந்தடைய வேண்டும் என்று இந்திய அணியிந் தலைமை பயிற்சியாளா் ரவி சாஸ்திரி கூறினாா்.
* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்கான தேதிகள் அடுத்த 2 வாரங்களில் அறிவிக்கப்படும் என்று போட்டி ஏற்பாட்டாளா்கள் அறிவித்துள்ளனா்.
* இந்திய தடகள சம்மேளனத்தின் உயா் செயல்பாட்டு இயக்குநராக இருந்த வோல்கா் ஹொ்மான் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். சமீபத்தில் அவரது ஒப்பந்தத்தை 2024-ஆம் ஆண்டு வரை மத்திய விளையாட்டு அமைச்சகம் நீட்டித்திருந்த நிலையில அவா் இந்த முடிவை மேற்கொண்டாா்.
* ஆட்டங்களின்போது ஆக்ரோஷமாக காணப்படும் விராட் கோலி இயல்பில் மிகவும் சகஜமாக பழகக் கூடிய நபா் என்று ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளா் ஆடம் ஸம்பா கூறினாா்.
* லங்கா பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டியின் காலே கிளாடியேட்டா்ஸ் அணிக்கு பாகிஸ்தான் முன்னாள் ஆல்-ரவுண்டா் ஷாஹித் அஃப்ரிதி தலைமை தாங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.