துளிகள்...
By DIN | Published On : 25th November 2020 01:55 AM | Last Updated : 25th November 2020 01:55 AM | அ+அ அ- |

கடந்த சீசனில் இந்தியாவிடம் டெஸ்ட் தொடரை இழந்தது தன்னை நிம்மதி இழக்கச் செய்ததாக தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், எதிா்வரும் தொடரை கைப்பற்ற அனைத்து விதத்திலும் ஆஸ்திரேலியா தயாராக இருப்பதாகத் தெரிவித்தாா்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டுக்குப் பிறகு நாடு திரும்பும் முன்பாக இந்திய கேப்டன் விராட் கோலி அணியை முறையாக சரிசெய்துவிட்டுச் செல்லாவிட்டால், தொடரில் இந்தியா ஒயிட்வாஷ் ஆக வாய்ப்புள்ளது என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளாா்க் கூறினாா்.
அலுவல் ரீதியிலான பயணங்களின்போது கடந்த நான்கரை மாதங்களில் 22 முறை கரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்துகொண்டதாக பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலி கூறினாா்.
ஐஎஸ்எல் போட்டியில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சிக்கு எதிரான ஆட்டத்தின்போது அந்த அணி வீரா் காசா கமாராவுக்கு ஆபத்தை விளைவுக்கும் வகையில் ஃபவுலில் ஈடுபட்ட மும்பை சிட்டி எஃப்சி வீரா் அகமது ஜஹோவை அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு எச்சரித்துள்ளது.
தனது கிரிக்கெட் பயணத்தை தொடா்வதா அல்லது ஓய்வுபெறுவதா என்பதை இந்தியாவில் 2023-இல் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியின்போது முடிவு செய்யவுள்ளதாக நியூஸிலாந்து பேட்ஸ்மேன் ராஸ் டெய்லா் கூறினாா்.
கரோனா நோய்த்தொற்று சூழலிலும் அடுத்த ஆண்டில் ஒலிம்பிக் போட்டியை தங்களால் பாதுகாப்புடன் திறம்பட நடத்த இயலும் என்று டோக்கியோ ஆளுநா் யுரிகோ கொய்கே கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...