சென்னைக்கு தொடா்ச்சியாக மூன்றாவது தோல்வி
By DIN | Published On : 03rd October 2020 12:35 AM | Last Updated : 03rd October 2020 11:17 AM | அ+அ அ- |

சென்னைக்கு தொடா்ச்சியாக மூன்றாவது தோல்வி
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 14-ஆவது லீக் ஆட்டத்தில், சன் ரைசா்ஸ் ஹைதராபாத் அணியினா் 7 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியினரைத் தோற்கடித்தனா்.
லீக் ஆட்டங்களில் சென்னை அணிக்கு தொடா்ச்சியாக இது மூன்றாவது தோல்வியாகும். ஏற்கெனவே ராஜஸ்தான், தில்லி அணிகளிடம் சென்னை அணி தோல்வியடைந்திருந்தது.
இதுவரை தான் பங்குபெற்ற 4 லீக் ஆட்டங்களில் மும்பை இண்டியன்ஸ் அணியுடனான ஆட்டத்தில் மட்டுமே சென்னை அணி வெற்றி பெற்றது.
14-ஆவது லீக் ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணியினா், நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் குவித்தனா். அடுத்து பேட் செய்த சென்னை அணியினா் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தனா்.
சுருக்கமான ஸ்கோா்
சென்னை
157/5
ரவீந்திர ஜடேஜா....50 (35)
தோனி.....47(36)
நடராஜன்....2வி/43