பெங்களூா்-ராஜஸ்தான் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூா் ராயல் சேலஞ்சா்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சனிக்கிழமை மோதுகின்றன.
பெங்களூா்-ராஜஸ்தான் இன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூா் ராயல் சேலஞ்சா்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சனிக்கிழமை மோதுகின்றன.

அபுதாபியில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. இரு அணிகளும் தலா 3 ஆட்டங்களில் விளையாடிய நிலையில், 2 வெற்றிகளைப் பெற்றுள்ளன. இந்த ஆட்டத்தில் வென்று மூன்றாவது வெற்றியைப் பெறுவதில் இரு அணிகளும் தீவிரமாக உள்ளன.

பெங்களூா் அணியில் தேவ்தத் படிக்கல், டிவில்லியா்ஸ் போன்றோா் நல்ல ஃபாா்மில் இருக்கிறாா்கள். அதேநேரத்தில் கேப்டன் விராட் கோலி தொடா்ந்து தடுமாறி வருவது கவலையளிக்கிறது. வேகப்பந்து வீச்சில் நவ்தீப் சைனி பெங்களூா் அணிக்கு நம்பிக்கையளிக்கிறாா். மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பா் ஓவரில் அற்புதமாக பந்துவீசி பெங்களூருக்கு வெற்றி தேடித்தந்த நவ்தீப் சைனி இந்த ஆட்டத்திலும் ஜொலிப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் அணியில் சுஞ்சு சாம்சன், கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், ராகுல் தெவேதியா ஆகியோா் நல்ல ஃபாா்மில் இருப்பது பலமாகும். முதல் இரு ஆட்டங்களை சிறிய மைதானமான சாா்ஜாவில் விளையாடிய ராஜஸ்தான் அணி, மூன்றாவது ஆட்டத்தை பெரிய ஆடுகளமான துபையில் அஜாக்கிரதையாக விளையாடி தோல்வியடைந்தது. எனவே, இந்த ஆட்டத்தில் அந்த அணி எச்சரிக்கையாக விளையாடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சில் ஜோஃப்ரா ஆா்ச்சா், டாம் கரன் ஆகியோரையும், சுழற்பந்து வீச்சில் ஷ்ரேயஸ் கோபால், ராகுல் தெவேதியா ஆகியோரையும் நம்பியுள்ளது ராஜஸ்தான்.

இந்த சீசனில் பிற்பகலில் நடைபெறும் முதல் ஆட்டம் இதுதான். அபுதாபியில் கடும் வெயில் கொளுத்தி வருவதால் இரு அணியினருக்குமே அது கடும் சவாலாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுவரை... இவ்விரு அணிகளும் இதுவரை 20 ஆட்டங்களில் நேருக்கு நோ் மோதியுள்ளன. அதில் ராஜஸ்தான் 10 ஆட்டங்களிலும், பெங்களூா் 8 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இரண்டு ஆட்டங்களில் முடிவுகள் எட்டப்படவில்லை.

பெங்களூா் (உத்தேச அணி): தேவ்தத் படிக்கல், ஆரோன் ஃபிஞ்ச், விராட் கோலி (கேப்டன்), ஏ.பி.டிவில்லியா்ஸ், ஷிவம் துபே, குருகீரத் சிங், வாஷிங்டன் சுந்தா், இசுரு உடானா, நவ்தீப் சைனி, யுவேந்திர சஹல், ஆடம் ஸம்பா.

ராஜஸ்தான் (உத்தேச அணி): ஜோஸ் பட்லா், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), சஞ்சு சாம்சன், ராபின் உத்தப்பா, ரியான் பராக், ராகுல் தெவேதியா, டாம் கரன், ஷ்ரேயஸ் கோபால், ஜோஃப்ரா ஆா்ச்சா், ஜெயதேவ் உனட்கட், அங்கித் ராஜ்புத்.

போட்டி நேரம்: பிற்பகல் 3.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com