சிபிஎல் சாம்பியன் ஆன பொலார்ட் அணி
By DIN | Published On : 11th September 2020 10:28 AM | Last Updated : 11th September 2020 10:28 AM | அ+அ அ- |

சிபிஎல் 2020 போட்டியை பொலார்ட் தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி வென்றுள்ளது.
சிபிஎல் போட்டி, டிரினிடாட் & டொபாகோ-வில் உள்ள இரு மைதானங்களில் நடைபெற்றன. இறுதிச்சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த வருட சிபிஎல் போட்டியின் இறுதிச்சுற்றில் செயிண்ட் லுசியா - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின.
முதலில் விளையாடிய செயிண்ட் லுசியா அணி 19.1 ஓவர்களில் 154 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பொலார்ட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பிறகு விளையாடிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி கடைசியில் அதிரடியாக விளையாடி 18.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து கோப்பையை வென்றது. 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த சிம்மன்ஸ் ஆட்ட நாயகனாகவும் பொலார்ட் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்கள்.
இந்த வருட சிபிஎல் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி விளையாடிய 12 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. அந்த அணி நான்காவது முறையாக சிபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
சிபிஎல்: டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்
2015 - சாம்பியன்
2017 - சாம்பியன்
2018 - சாம்பியன்
2020 - சாம்பியன்