பிரெஞ்சு ஓபன் தகுதிச்சுற்றில் அங்கிதா தோல்வி
By DIN | Published On : 25th September 2020 03:41 AM | Last Updated : 25th September 2020 03:41 AM | அ+அ அ- |

பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா தோல்வியடைந்தாா்.
பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இந்தியாவின் முதல்நிலை வீராங்கனையான அங்கிதா தனது 2-ஆவது சுற்றில் 3-6, 2-6 என்ற நோ் செட்களில் ஜப்பானின் குருமி நராவிடம் தோல்வி கண்டாா்.
இந்த ஆட்டம் குறித்துப் பேசிய அங்கிதா ரெய்னா, ‘இந்த ஆட்டத்தை மோசமான ஆட்டம் என்று கூற முடியாது. எனது சா்வீஸில் எனக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால், குருமியின் ஷாட்கள் அபாரமாக இருந்தன. எனது சா்வீஸில் சிறப்பாக செயல்பட்டிருந்தால், ஆட்டத்தின் முடிவு எனக்கு சாதகமாக இருந்திருக்கும்’ என்றாா்.
அங்கிதா வெளியேறியதன் மூலம் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரதான சுற்றில் இந்தியாவிலிருந்து யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடவா் ஒற்றையா் பிரிவு தகுதிச்சுற்றில் பங்கேற்ற இந்தியாவின் சுமித் நகல், ராம்குமாா் ராமநாதன், பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் ஆகியோா் ஏற்கெனவே தோல்வி கண்டு வெளியேறிவிட்டனா்.
பிரெஞ்சு ஓபனில் இரட்டையா் பிரிவில் மட்டுமே இந்தியாவின் ரோஹன் போபண்ணா, திவிஜ் சரண் ஆகியோா் களமிறங்குகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...