ஒலிம்பிக்ஸுக்குத் தகுதி பெற்ற 18 வயது இந்திய மல்யுத்த வீராங்கனை: 0-6லிருந்து மீண்டு வந்த தருணங்கள் (விடியோ)

முதலில் 0-6 எனப் பின்தங்கியிருந்தார் சோனம். பிறகு கடுமையாகப் போராடி...
சோனம் மாலிக் (கோப்புப் படம்)
சோனம் மாலிக் (கோப்புப் படம்)

இந்தியாவைச் சேர்ந்த மல்யுத்த வீராங்கனைகளான 18 வயது சோனம் மாலிக்கும் 19 வயது அன்ஷு மாலிக்கும் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்கள்.

கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசியத் தகுதிச்சுற்று மல்யுத்தப் போட்டியில் 57 கிலோ பிரிவின் அரையிறுதியில் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த அக்மேடோவைத் தோற்கடித்து டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதியடைந்தார் அன்ஷு மாலிக்.

62 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதிப் போட்டியில் கஜகஸ்தானின் கேசிமோவாவைப் பரபரப்பான முறையில் தோற்கடித்தார் சோனம் மாலிக். முதலில் 0-6 எனப் பின்தங்கியிருந்தார் சோனம். பிறகு கடுமையாகப் போராடி தொடர்ச்சியாக 9 புள்ளிகள் பெற்று, கடைசியில் 9-6 என்கிற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்றார். 

இதுவரை டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு மூன்று மல்யுத்த வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளார்கள். இவர்களுக்கு முன்பு, 53 கிலோ பிரிவில் வினேஷ் போகத் தகுதியடைந்துள்ளார். ஆண்கள் பிரிவில் பஜ்ரங் புனியா (65 கிலோ), ரவி தாஹியா (57 கிலோ), தீபக் புனியா (86 கிலோ) ஆகியோா் தகுதிபெற்றுள்ளனா்.

வெற்றி பெற்ற சோனம் மாலிக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com