41 மாதங்களாக முதல் இடத்திலிருந்த விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளிய பாகிஸ்தான் வீரர்!

41 மாதங்களாக முதல் இடத்திலிருந்த விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளிய பாகிஸ்தான் வீரர்!

1 மாதங்களாக முதல் இடத்தில் இருந்த கோலி இதனால் 2-ம் இடத்துக்கு இறங்கியுள்ளார்.
Published on

ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாம் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

பாகிஸ்தான் அணிக்காக 31 டெஸ்ட், 80 ஒருநாள், 49 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் 26 வயது பாபர் அஸாம். 

இந்நிலையில் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் நீண்ட நாளாக முதல் இடத்தில் இருந்த இந்திய கேப்டன் விராட் கோலியைப் பின்னுக்குத் தள்ளியுள்ளார் பாபர் அஸாம். கடந்த 1258 நாள்களாக அதாவது 41 மாதங்களாக முதல் இடத்தில் இருந்த கோலி இதனால் 2-ம் இடத்துக்கு இறங்கியுள்ளார். 2017 அக்டோபரில் டி வில்லியர்ஸைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார் கோலி. ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் அவர் செலுத்திய ஆதிக்கம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. 

சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 103, 31, 94 ரன்கள் எடுத்து அசத்தினார் பாபர் அஸாம். இதையடுத்து ஐசிசி தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளார். ஒருநாள் தரவரிசையில் ஜாகீர் அப்பாஸ், மியாண்டட். முகமது யூசுப் ஆகியோருக்கு அடுத்து முதலிடம் பிடித்த 4-வது பாகிஸ்தான் வீரர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் 2-வது இடத்தில் விராட் கோலியும் 3-வது இடத்தில் ரோஹித் சர்மாவும் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com