லார்ட்ஸ் டெஸ்ட்: ஒவ்வொரு இந்திய வீரரின் பங்களிப்பில் ருசித்த வெற்றி

பல சந்தர்ப்பங்களில் ஆட்டம் கை நழுவி போனபோது ஒவ்வொரு வீரராகத் தங்கள் பங்களிப்பை அளித்தார்கள். 
லார்ட்ஸ் டெஸ்ட்: ஒவ்வொரு இந்திய வீரரின் பங்களிப்பில் ருசித்த வெற்றி

2001 கொல்கத்தா, சமீபத்திய பிர்ஸ்பேன் டெஸ்ட் வெற்றிகளை ஞாபகப்படுத்திவிட்டது லார்ட்ஸ் டெஸ்ட்.

5-ம் நாளில் தொடக்கத்தில் இங்கிலாந்து அணியின் நிலைமை பிரமாதமான நிலையில் இருந்தது. அதிலும் ரிஷப் பந்த் ஆட்டமிழந்த பிறகு அந்த அணியின் ரசிகர்கள் துள்ளிக்குதித்தார்கள்.

ஆனால் ஷமியும் பும்ராவும் யாருமே எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தினார்கள். 9-வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

இங்கிலாந்துக்கு இலக்கு நிர்ணயித்தபிறகு இந்திய அணியின் பந்துவீச்சில் சீற்றம் தெரிந்தது. சரியான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தவண்ணம் இருந்தன. 120 ரன்களுக்குச் சுருண்டது இங்கிலாந்து.

ஆட்ட நாயகனாக ராகுல் தேர்வானார். இந்த டெஸ்ட் வெற்றிக்குப் பலரும் உழைத்துள்ளார்கள். ஓரிரு வீரர்களால் கிடைத்த வெற்றியல்ல இது. பல சந்தர்ப்பங்களில் ஆட்டம் கை நழுவி போனபோது ஒவ்வொரு வீரராகத் தங்கள் பங்களிப்பை அளித்தார்கள். 

முதல் இன்னிங்ஸ் 

ராகுல் - 129
ரோஹித் - 83
கோலி - 42 
ஜடேஜா - 40

இஷாந்த் சர்மா - 3 விக்கெட்டுகள்
ஷமி - 2 விக்கெட்டுகள்
சிராஜ் - 4 விக்கெட்டுகள்
ஜடேஜா - 1 ரன் அவுட்

2-வது இன்னிங்ஸ் 

புஜாரா - 45
ரஹானே - 61
ஷமி - 56* 
பும்ரா - 34* 

பும்ரா - 3 விக்கெட்டுகள்
சிராஜ் - 4 விக்கெட்டுகள்
இஷாந்த் சர்மா - 2 விக்கெட்டுகள்

இரு இன்னிங்ஸிலும்....

ரிஷப் பந்த் = 4 டிஸ்மிஸல்கள்
இஷாந்த் சர்மா - 5 விக்கெட்டுகள்
சிராஜ் - 8 விக்கெட்டுகள்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com