
இந்தியாவுடனான 3-வது டெஸ்ட் ஆட்டத்துக்கான இங்கிலாந்து அணியில் டேவிட் மலான் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டம் ஹெட்டிங்லேவில் ஆகஸ்ட் 25-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான 15 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து பயிற்சியாளர் சில்வர்வுட் புதன்கிழமை வெளியிட்டார். இதில் டேவிட் மலான் பெயர் இடம்பெற்றுள்ளது.
இதையும் படிக்க | 3-வது டெஸ்டில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் விளையாடுவது சந்தேகம்
கடந்த 3 ஆண்டுகளில் முதன்முறையாக அவர் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார். கடைசியாக 2018-இல் எட்ஜ்பாஸ்டனில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடினார். வேகப்பந்துவீச்சாளர் சகிப் மஹ்மூத்தும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஸாக் கிராலே மற்றும் டோம் சிப்லி அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து அணி:
ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோனாதன் பேர்ஸ்டோவ், ரோரி பர்ன்ஸ், ஜாஸ் பட்லர், சாம் கரன், ஹசீப் ஹமீத், டான் லாரன்ஸ், சகிப் மஹ்மூத், டேவிட் மலான், கிரெய்க் ஓவர்டன், ஆலி போப், ஆலி ராபின்சன், மார்க் வுட்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.