காயத்திலிருந்து குணமான ஷர்துல் தாக்குர்: என்ன செய்யப் போகிறார் விராட் கோலி?

முதல் டெஸ்டில் விளையாடியபோது காயமடைந்த ஷர்துல் தாக்குர், 2-வது டெஸ்டிலிருந்து விலகினார்.
காயத்திலிருந்து குணமான ஷர்துல் தாக்குர்: என்ன செய்யப் போகிறார் விராட் கோலி?

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. மூன்றாவது டெஸ்ட் நாளை தொடங்குகிறது. 

முதல் டெஸ்டில் விளையாடியபோது காயமடைந்த ஷர்துல் தாக்குர், 2-வது டெஸ்டிலிருந்து விலகினார். நான்கு வேகப்பந்து வீச்சாளர் + ஒரு சுழற்பந்து வீச்சாளர் என்கிற கூட்டணியே இந்தத் தொடரில் தொடரும் என முதல் டெஸ்டின் முடிவில் விராட் கோலி தகவல் தெரிவித்தார். இதனால் 2-வது டெஸ்டில் ஷர்துல் தாக்குருக்குப் பதிலாக இஷாந்த் சர்மா இடம்பெற்று சிறப்பாகப் பந்துவீசினார். 

இந்நிலையில் காயத்திலிருந்து குணமான ஷர்துல் தாக்குர், 3-வது டெஸ்டில் விளையாடுவதற்கான உடற்தகுதியை அடைந்துள்ளார். இதுபற்றி ரஹானே தெரிவித்ததாவது:

ஷர்துல் தாக்குர் முழு உடற்தகுதியுடன் உள்ளார். இந்திய அணிக்கு மீண்டும் தேர்வாவதற்குத் தயாராக உள்ளார். அணிக்கு என்ன மாதிரியான பந்துவீச்சாளர்கள் தேவை என்பதை இனிமேல் தான் முடிவு செய்வோம். அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் விளையாடுவதற்குத் தயாராக உள்ளார்கள் என்றார்.

ஷர்துல் தாக்குரை அணியில் சேர்த்தால் அவருடைய பேட்டிங் திறமை உதவியாக இருக்கும் என கோலி கருதினார். அதனால் தான் முதல் டெஸ்டில் தாக்குர் இடம்பெற்றார். எனினும் 2-வது டெஸ்டில் இஷாந்த் சர்மா சிறப்பாகப் பந்துவீசியதால் யாரைத் தேர்வு செய்வது என்கிற குழப்பத்தில் தற்போது உள்ளது இந்திய அணி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com