அதை எப்படி மறக்க முடியும்?: கோலிக்கு அளித்த 'வாழ்வு' பற்றி டேவிட் மலான்

சிலசமயங்களில் நீங்கள் ரன்கள் எடுக்க மாட்டீர்கள், கேட்சுகளை நழுவவிடுவீர்கள். எல்லாமே தவறாக அமையும்...
அதை எப்படி மறக்க முடியும்?: கோலிக்கு அளித்த 'வாழ்வு' பற்றி டேவிட் மலான்

2018 தொடரில் விராட் கோலியின் கேட்சுகளை இருமுறை நழுவவிட்டதை மறக்க முடியாது என்று கூறியுள்ளார் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான்.

சிறந்த டி20 வீரரான டேவிட் மலான், இங்கிலாந்து டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். 33 வயது மலான், இங்கிலாந்து அணிக்காக 15 டெஸ்டுகள், 6 ஒருநாள், 30 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். டெஸ்டில் கடைசியாக இந்தியாவுக்கு எதிராக 2018-ல் விளையாடினார். 2018 தொடரில் தனது முதல் இன்னிங்ஸில் 149 ரன்கள் எடுத்ததோடு, டெஸ்ட் தொடரில் 593 ரன்கள் எடுத்து அசத்தினார் விராட் கோலி. அவர் அளித்த இரு கேட்சுகளை ஸ்லிப் பகுதியில் நழுவவிட்டார் டேவிட் மலான். முதல்முறை கோலி 21 ரன்களிலும் 2-ம் முறை 51 ரன்களிலும் விளையாடிக்கொண்டிருந்தார். இதுபற்றி டேவிட் மலான் கூறியதாவது:

கோலியின் இரு கேட்சுகளை நழுவவிட்டதை என்னால் மறக்க முடியாது. அதனால் அவர் 150 ரன்கள் வரை எடுத்துவிட்டார். நல்ல நினைவாக அது அமையவில்லை. டெஸ்ட் கிரிக்கெட் என்றால் என்ன என்பதை அது உணர்த்துகிறது. சிலசமயங்களில் நீங்கள் ரன்கள் எடுக்க மாட்டீர்கள், கேட்சுகளை நழுவவிடுவீர்கள். எல்லாமே தவறாக அமையும். அதன்பிறகு ஸ்லிப் பகுதியில் அவ்வளவாக நான் நிற்பதில்லை. கவுண்டி கிரிக்கெட்டில் வெவ்வேறு பகுதிகளில் ஃபீல்டிங் செய்துவிட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் திடீரென்று ஸ்லிப் பகுதியில் நிற்பது கடினமாக இருந்தது. எனினும் இங்கிலாந்துக்காக விளையாடும்போது எல்லாவிதமான வாய்ப்புகளையும் நிறைவேற்ற வேண்டும். அடுத்த வாய்ப்பு மீண்டும் வந்தால் சில கேட்சுகளைப் பிடிப்பதில் ஆர்வமாக உள்ளேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com