அசத்தும் ஆண்டர்சன்: நான்கு விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற்றம்

முதல் நாள் உணவு இடைவேளையின்போது 4 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.
அசத்தும் ஆண்டர்சன்: நான்கு விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற்றம்

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய அணி முதல் நாள் உணவு இடைவேளையின்போது 4 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. மூன்றாவது டெஸ்ட் லீட்ஸில் இன்று தொடங்கியுள்ளது.

டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். 2-வது டெஸ்டில் விளையாடிய அதே இந்திய அணி தான் லீட்ஸிலும் விளையாடுகிறது. இதனால் அஸ்வினுக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியில் டேவிட் மலான், கிரைக் ஓவர்டன் இடம்பெற்றுள்ளார்கள்.

முதல் ஓவரிலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ரன் எதுவும் எடுக்காமல் ஆண்டர்சன் பந்தில் வீழ்ந்தார் கே.எல். ராகுல். அடுத்ததாக 1 ரன்னில் மீண்டும் ஆண்டர்சனுக்கு விக்கெட்டைப் பரிசாக அளித்து வெளியேறினார் புஜாரா. இதுபோதாதென்று 7 ரன்களில் கேப்டன் விராட் கோலியை வீழ்த்தினார் ஆண்டர்சன். 21 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்ததால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். 

ரோஹித் சர்மாவும் ரஹானேவும் சரிவை ஓரளவு தடுத்து நிறுத்தினார்கள். 65 பந்துகளை எதிர்கொண்டு 18 ரன்கள் எடுத்த ரஹானே முதல் பகுதியின் கடைசி ஓவரில் ஆலி ராபின்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இந்திய அணி முதல் நாள் உணவு இடைவேளையின்போது 25.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 75 பந்துகளை எதிர்கொண்டு 15 ரன்களுடன் களத்தில் உள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com